என்னது அதுக்குள்ள விவாகரத்தா...? 'மெலனியா அதுக்காக தான் வெயிட்டிங்...' - உதவியாளர்கள் கூறும் பரபரப்பு தகவல்கள்...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற டிரம்பை அவரின் மனைவி விவாகரத்து செய்யப்போவதாக வெளிவந்துள்ள செய்தி தற்போது வைரலாகி உள்ளது.

அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார் மேலும் முன்னாள் அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்ப் இன்னும் அதிகார பூர்வமாக வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறவில்லை. இந்நிலையில் தற்போது அவரின் மனைவி மெலானியா டிரம்ப்பை விவாகரத்து செய்ய முடிவெடுத்து விட்டதாக முன்னாள் உதவியாளர்கள் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அவர் வெள்ளை மாளிகையை விட்டு வெளிவந்த பிறகே மெலானியா இந்த விவகாரத்தை செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
மெலானியா டொனால்ட் டிரம்ப்பின் மூன்றாவது மனைவி எனவும் இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் தற்போது வெளிவந்துள்ள இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் டிரம்ப் மற்றும் மெலானியாவின் மகன் போரனுக்கு சொத்தில் சமமான பங்கை வழங்க மெலனியா திருமணத்திற்கு பிந்தைய ஒப்பந்தத்தில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார் என மெலனியாவின் முன்னாள் உதவியாளர் ஸ்டீபனி வோல்கோஃப், கூறியுள்ளார். மேலும் மற்றொரு உதவியாளர் ஒமரோசா மனிகவுல்ட் நியூமன் கூறுகையில், தம்பதியின் 15 ஆண்டுகால திருமண பந்தம் முடிந்துவிட்டது, அவர் பதவியில் இருந்து வெளியேறினால் மெலனியா டிரம்ப் விவகாரத்து செய்து விடுவார். இதற்காகவே மெலனியா காத்திருக்கிறார் என கூறியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இதுவரை மெலனியா இதுவரை எந்தவித அதிகாரபூர்வ அறிக்கையையோ மற்றும் இந்த செய்தி குறித்தான மறுப்பையோ தெரிவிக்காததும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
