'இவருக்க ஜாதகம் சூப்பர்'... 'கிரகங்கள் எல்லாம் சரியா இருக்கு'... 'ஆனா ஜெயிச்சாலும் ஒரு பிரச்சனை இருக்கு'... பிரபல இந்திய ஜோதிடர் கணிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Nov 03, 2020 08:42 PM

அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்பது குறித்து பிரபல இந்திய ஜோதிடர் கணித்துள்ளார்.

Indian astrologer is claiming that Trump is to win the second terms

அமெரிக்காவின் எதிர்காலத்தை மட்டுமல்லாமல் உலகம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு எந்தப் பாதையை நோக்கிச் செல்லும் என்பதைத் தீர்மானிக்கக் கூடிய அமெரிக்க அதிபர் தேர்தல், அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜோ பிடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுவரை 8 கோடிக்கும் மேற்பட்டோர் முன்கூட்டியே வாக்களித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகள் தீவிர இறுதி கட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து உலக அளவில் பெரும் விவாதங்களும், பல கோடி ரூபாய் அளவில் சூதாட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் அதிகபட்சமாக 9 லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெறுவார் என்று இந்தியாவின் பிரபல ஜோதிடரான சங்கர் சரண் திரிபாதி கணித்துள்ளார்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் சரண் திரிபாதி அமெரிக்க அதிபர் டிரம்பின் ஜாதகத்தை ஆய்வு செய்து அனைத்து கிரகங்களும் டிரம்புக்கு சாதகமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றாலும் அவர் வாக்குகளில் மோசடி செய்துதான் வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாவார் என்றும் ஜோதிடர் திரிபாதி தெரிவித்துள்ளார். பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத்தின் ஜோதிட ஆலோசகராக இருந்த சங்கர் சரண் திரிபாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் இருந்தவர் ஆவார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Indian astrologer is claiming that Trump is to win the second terms | India News.