"ஸ்டார்ட் ஆயிடுச்சு.. இது அதுதான்!".. கொரோனா தாக்கம் குறித்த முக்கிய எச்சரிக்கை விடுத்த கனடா சுகாதார இயக்குநர்!
முகப்பு > செய்திகள் > உலகம்கனடாவின் மத்திய மாகாணங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக கனடாவின் கியூபெக் மாகாணத்தில் கொரோனா இரண்டாவது அலை உண்டாகத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. கியூபெக் மற்றும் ஒண்டாரியாவில் ஒரே நாளில் 1000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
குறிப்பாக கியூபெக் மாகாணத்தில் மட்டும் 586 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது முந்தைய தின தொற்று எண்ணிக்கையை விட நூற்றுக்கணக்கில் அதிகமான எண்ணிக்கையாகும்.
இதுபற்றி பேசிய கியூபெக் மாகாண பொது சுகாதார இயக்குநர் Dr Horacio Arruda கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பேசியவர், இது கொரோனாவின் 2வது அலையின் தொடக்கமாக இருக்கலாம் என்றும், நாம் முயற்சித்தால் இதனை முந்தைய அலையைவிட சிறியதாக மாற்ற முடியும், அதே சமயம் முயற்சி செய்யாமல் விட்டால், முந்தைய அலையைவிட பெரிய அலையாக உருமாறும் அவலத்தை சந்திக்க நேரும் என்றும் கூறியுள்ளார்.