"இதோ, இப்ப வந்துரும், வந்துரும்-ன்னு காத்திருந்த மக்களுக்கு... 'அதிர்ச்சி' கொடுத்த WHO...!" - தடுப்பூசி விஷயத்தில் வெளியான 'புதிய' தகவல்!!!
முகப்பு > செய்திகள் > உலகம்தற்போது பரிசோதனையில் உள்ள கொரோனா தடுப்பூசிகள் அனைத்தும் முறையாக செயல்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்த தொற்று நோயால் உலகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 9,75,429 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே இந்த நோய் பாதிப்பை தடுக்க சர்வதேச நாடுகள் அனைத்தும் தொடர்ந்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
குறிப்பாக தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளில் பல நாடுகளும் இறுதி கட்டத்தில் உள்ளன. ஏற்கனவே தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்துள்ள ரஷ்யா அதன் உற்பத்தியை தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி தொடர்பாக ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அதிர்ச்சி தகவல் ஒன்றைக் கூறியுள்ளார்.
இதுகுறித்துப் பேசியுள்ள டெட்ரோஸ் அதானோம், "தற்போது பரிசோதனையில் உள்ள எந்தவொரு கொரோனா தடுப்பூசியும் செயல்படும் என்பதற்கு எங்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நாங்கள் அதிக பரிசோதனைகளை மேற்கொள்வதால், பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும். இந்த நோயை சமாளிக்க கிட்டத்தட்ட 200 தடுப்பூசி பரிசோதனைகள் களத்தில் உள்ளது. தடுப்பூசி வளர்ச்சியின் வரலாற்றில் சில தோல்வியடைந்தாலும் சில தடுப்பு மருந்துகள் வெற்றிபெறும்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
