'எங்களை மன்னிச்சிடுங்க'... 'சர்ச்சை குறித்து கென்ட் நிறுவனம் விளக்கம்'... விளம்பரத்தில் நடந்தது என்ன?... சர்ச்சைக்கு என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > இந்தியாகென்ட் நிறுவனம் வெளியிட்ட விளம்பரம் கடும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில், அதற்காக அந்த நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
சமீபத்தில் கென்ட் நிறுவனம் விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. மாவு பிசையும் இயந்திரம் குறித்த அந்த விளம்பரத்தில், ''மாவு பிசையப் பெண் பணியாளர்களை அனுமதிக்கிறீர்களா?, அவர்களின் கைகளில் தோற்று இருக்கலாம், எனேவ பாதுகாப்பான மற்றும் சுத்தமான எங்கள் நிறுவனத்தின் இயந்திரத்தை மாவு பிசையப் பயன்படுத்துங்கள் எனத் தெரிவித்திருந்தனர்.
இந்த விளம்பரத்திற்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. வீட்டில் வேலை செய்யும் பெண் பணியாளர்களை இந்த விளம்பரம் மிகவும் இழிவு படுத்துகிறது எனப் பலரும் கடுமையான கண்டன குரல்களை எழுப்பினார்கள். இதையடுத்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, கென்ட் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. இது தொடர்பாக ட்விட் ஒன்றையும் பதிவிட்டுள்ளது.
அதில், ''நாங்கள் எந்த வித உள்நோக்கத்துடனும் இந்த விளம்பரத்தை வெளியிடவில்லை. எங்களது மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் நாங்கள் மதிக்கிறோம். அந்த விளம்பரத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம்'' எனத் தெரிவித்துள்ளார்கள்.