‘கொரோனா தொற்றின் 3-வது அலை தொடங்கினாலும்’... 'கொரோனா நோயாளி வீட்டில் இனி நோட்டீஸ் ஒட்டப்படாது’... ‘அதிரடி முடிவு எடுத்த மாநிலம் அரசு’!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் கொரோனா தொற்றின் 3-வது அலை தொடங்கியது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

டெல்லியில் மீண்டும் தொற்று அதிகரிப்பால் தீவிர கண்காணிப்பில் உள்ளது என கெஜ்ரிவால் தெரிவித்தார். இந்நிலையில், டில்லியில் கொரோனா நோயாளிகளின் வீடுகளுக்கு வெளியே நோட்டீஸ் ஒட்டப்படுவதை எதிர்த்து, வழக்கறிஞர் குஷ் கர்லா டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், 'கொரோனா நோயாளிகளின் வீடுகளுக்கு வெளியே நோட்டீஸ் ஒட்டுவது அவர்களின் அந்தரங்க உரிமை, வாழும் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்துக்கு எதிரானது.
குடியிருப்போர் நலச்சங்க உறுப்பினர்களிடமும் சமூக ஊடக குழுக்களிலும் கொரோனா நோயாளிகளின் பெயர்கள் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இது நோயாளிகளை களங்கப்படுத்துவதாக உள்ளது,' என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, 'கொரோனா நோயாளிகளின் வீடுகளுக்கு வெளியே நோட்டீஸ் ஒட்டுவதற்கு எதிராக விரைவில் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும். ஏற்கனவே ஒட்டப்பட்டிருந்த நோட்டீசுகள் உடனடியாக அகற்றப்படும்,' என டில்லி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, 'கொரோனா நோயாளிகளின் பெயர்களை வெளியிடக்கூடாது. குறிப்பாக குடியிருப்போர் நலச் சங்க உறுப்பினர்கள் அல்லது சமூக ஊடகக் குழுக்களிடம் பகிர்ந்துகொள்ளக் கூடாது. இது தொடர்பாகவும் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்,' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மற்ற செய்திகள்
