'தமிழகத்தின் இன்றைய (03-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (03-11-2020) ஒரே நாளில் 2,435 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 7,31,942 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் சுமார் 19,201 சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,01,848 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிகப்பட்சமாக கோயம்பத்தூரில் 238 பேருக்கும், செங்கல்பட்டில் 136 பேருக்கும், திருவள்ளூரில் 113 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 2,707 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,01,526 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப் பொறுத்தவரை அரசு மருத்துவமனையில் 15 பேரும், தனியார் மருத்துவமனையில் 16 பேர் என மொத்தம் 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதன்காரணமாக இதுவரை சுமார் 11,214 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

மற்ற செய்திகள்
