ஜெட் வேகத்துல 'டெல்டா பிளஸ்' பரவிட்டு இருக்கு...! 'இந்த நேரத்துல ஊரடங்கை தளர்த்துறது பெரிய ஆபத்துல போய் முடியும்...' அதிரடி 'முடிவு' எடுத்த நாடு...!
முகப்பு > செய்திகள் > உலகம்புதியவகை டெல்டா (Delta) வேரியண்ட் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கை தளர்த்த முடியாது என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.

பிரிட்டனில் தொடர்ந்து வரும் கொரோனா ஊரடங்கை தளர்த்தி, வரும் ஜூன் 21-ஆம் தேதி முதல் ரெஸ்டாரண்டுகள், இரவுக் கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றை முழுமையாக திறக்க அனுமதிக்கலாம் என அரசு திட்டமிட்டிருந்தது.
ஆனால் தற்போது பிரிட்டனில் புதிதாக டெல்டா (Delta) வேரியண்ட் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த உருமாறிய புதிய 'டெல்டா பிளஸ்' வகை கொரோனா வைரஸ் ஆகும்.
இதுகுறித்து கூறிய பிரதமர் போரிஸ் ஜான்சன், 'இந்த உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இன்னும் சிறிது காலம் காத்திருப்பது நல்லது என கருதுகிறோம்.
தற்போதைய சூழலை கணக்கிடும்போது, நான்கு வாரங்களுக்கு மேல் தேவையில்லை என்று நம்புகிறேன்' எனக் கூறியுள்ளார்.
மேலும், பிரிட்டன் அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் பேட்ரிக் வல்லன்ஸும், இன்னும் நான்கு வாரங்களின் நோய் தாக்கத்தின் உச்சம் 30% முதல் 50% வரை குறைந்துவிடும் என கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வேரியண்ட் வேகமாக பரவி வருகிறது. இது, முந்தைய அலையை விட இது 60% அதிகமாக பரவக்கூடியது என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், மூன்றாவது அலையைத் தூண்டும் சாத்தியக்கூறுகள் இவற்றுக்கு உண்டு என விஞ்ஞானிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
