எதுக்கு நாம 'ரிஸ்க்' எடுக்கணும்...! ஒரு வாரத்துக்காவது 'இந்தியால' இருந்து 'அத' வாங்காதீங்கப்பா...! ஏன்னா 'அந்த' பாக்கெட்ல 'செக்' பண்ணி பார்த்தப்போ... - சீனாவின் அதிரடி உத்தரவு...!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் சீனாவில் மட்டும் ஒப்பிட்டளவில் பெரியதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

அதோடு சீனா தற்போது தங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவுவதாக கூறிவருகிறது.
அதோடு உறைந்த கடல்உணவு பாக்கெட்டில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால், 6 நிறுவன தயாரிப்புகளை இறக்குமதி செய்ய சீனா தடைவிதித்துள்ளது.
அதில் இந்திய பொருட்களும் அடங்கும். இந்தியாவைச் சேர்ந்த ஆறு கடல்உணவு தயாரிப்பு நிறுவனங்கள் உறைந்த கடல் உணவை சீனாவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இதனை ஆய்வு செய்த சீன சுங்கஅதிகாரிகள், பாக்கெட்டில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியந்துள்ளனர். இதன்காரணமாக ஒருவாரத்திற்கு இந்திய நிறுவனங்களிடம் இருந்து கடல் உணவை இறக்குமதி செய்ய சீனா தடைவிதித்துள்ளது.
கொரோனா தொற்றுப் பரவல் இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் வேகமாக அதிகரித்து வருகிறது. சிறிய நாடுகளில், குறிப்பாக இலங்கையில் இது தீவிரமாகக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஆனால், இந்த நாடுகளில் சீனா செய்துள்ள நிவாரணப் பணிகளின் வேகம், இந்த நாடுகளில் சீனாவின் செல்வாக்கை அதிகரிக்கக்கூடும் என்று வல்லுநர்கள் நம்புகின்றனர்.
அதன் அண்டை நாடுகளைப் போலவே, கடந்த ஆண்டு இலங்கையில் முதல் அலை சற்று தீவிரம் குறைந்தே இருந்தது. ஆனால் இப்போது கொரோனா தீவிரம், அந்நாட்டின் சுகாதார அமைப்புக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது.
தற்சமயம், இங்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 3,000 புதிய நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். ஒரு மாதத்திற்கு முன்பிருந்த நிலையுடன் ஒப்பிடும்போது இது 1000% உயர்வு ஆகும். எனவே கிட்டத்தட்ட 200 கோடி மக்கள்தொகை கொண்ட தெற்காசியா, தற்சமயம் மிகவும் கடுமையான சுகாதார நெருக்கடியை எதிர்கொள்வதால் சீன மிகவும் எச்சரிக்கையாக பிற நாடுகளில் இருந்து கொரோனா தொற்று பரவுவதை தடுக்க பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

மற்ற செய்திகள்
