மேடம்...! 'கொஞ்சம் ஹாஸ்பிட்டல் வெளிய வாங்க...' 'கொரோனா சரி ஆன உடனே...' 'சிகிச்சை அளித்த செவிலியர்களை அழைத்து...' - வழக்கறிஞர் செய்த 'நெகிழ' வைக்கும் காரியம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா நோயாளியாக இருந்த வழக்கறிஞர் மீண்டு வீட்டிற்கு வரும் போது செவிலியர்களின் பாதங்களில் மல்லிகை பூவை தூவி நன்றி தெரிவித்த நெகிழ்ச்சியான சம்பவம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அரங்கேறியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். வழக்கறிஞராக பணிபுரிந்து இவர் சில தினங்களுக்கு முன் நாட்களாக நுரையீரலில் கொரோனா தொற்று ஏற்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் ஐசுலேசன் வார்டில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
நோய் தொற்று அதிகரித்த போது இருமலுடன் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்ட நிலையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தொடர் கண்காணிப்பு மற்றும் தொடர் சிகிச்சையால் முழுமையாக குணமடைந்தார்.
இந்நிலையில் அவர் உடம்பு முடியாமல் இருக்கும் போது இவரை அக்கறையுடன் பார்த்துக் கொண்ட செவிலியர்களுக்கு நல்ல முறையில் நன்றி செலுத்த வேண்டும் என்று நினைத்த மணிமாறன் செய்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மணிமாறன் வீட்டிற்கு செல்லும் செவிலியர்களை அறந்தாங்கி அரசு மருத்துவமனையின் வெளியே வரச்சொல்லி இரண்டு செவிலியர்களின் பாதங்களிலும் மல்லிகைப் பூவை தூவி கை எடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்தார்.
இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் பெரும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அப்போது மணிமாறன் , 'என்னை எந்த அளவிற்கு கவனித்துக் கொண்டீர்களோ அதுபோல இங்கு வரும் அனைத்து நோயாளிகளையும் கவனித்துக் கொள்ளுங்கள். மிக்க நன்றி' என்றும் கூறினார்.