'ஆற்றுக்கு அந்த பக்கமும் நிறைய மக்கள் கஷ்ட படுவாங்க இல்ல...' 'ஆற்றைக் கடக்க கொரோனா மருத்துவ பணியாளர்கள் எடுத்த ரிஸ்க்...' - இணையத்தில் 'வைரலாகும்' புகைப்படம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் பாதிப்படைந்தவர்களுக்கு சிகிச்சை செய்ய பொக்லைன் வண்டியில் செல்லும் மருத்துவ பணியாளர்களின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

இந்திய யூனியன் பிரதேசமான லடாக்கில் கொரோனா பாதிப்பு சுமார் 19 ஆயிரத்து 258 பேராக உள்ளது. தற்போது மருத்துவமனையில் 1011 பேர் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் லடாக் எம்.பி. ஜம்யாங் செரிங் நம்ஜியால் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
லடாக்கில் கொரோனா வைரஸ் பாதிப்படைந்தவர்களுக்கு சிகிச்சை செய்ய செல்லும் மருத்துவ பணியாளர்களின் புகைப்படம் இது. வழி இல்லாத பாதையிலும் சகமனிதனுக்கு செய்யவேண்டிய தன் கடமைகளை திறம்பட செய்ய முயலும் மருத்துவ பணியாளர்கள்.
அந்த புகைப்படத்தில், பொக்லைன் வண்டியில் முன்பக்கத்தில் இருக்கும் தோண்டும் பகுதியை, பாலம்போல பயன்படுத்தி 4 மருத்துவ பணியாளர்கள் ஆற்றை கடக்கிறார்கள்.
இதற்கு கேப்ஷனாக,'கொரோனா முன்கள பணியாளர்கள் தங்கள் மருத்துவ சேவைக்காக லடாக்கின் கிராமத்துக்கு வருகிறார்கள், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பை கொடுப்போம்' எனவும் பதிவிட்டுள்ளார் லடாக் எம்.பி. ஜம்யாங் செரிங் நம்ஜியா.
Salute to our #CovidWarriors.
A team of #Covid warriors crossing river to render their services in rural Ladakh.
Stay Home, Stay Safe, Stay Healthy and Cooperate the Covid Warriors. pic.twitter.com/cAgYjGGkxQ
— Jamyang Tsering Namgyal (@jtnladakh) June 7, 2021

மற்ற செய்திகள்
