"என் வாழ்க்கைல முதல் முறையா... வருமான வரி செலுத்த முடியல"!.. 'ஏன் தெரியுமா'?.. நடிகை கங்கனா ரனாவத் வைரல் கருத்து!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபிரபல நடிகை கங்கனா ரனாவத், இந்த ஆண்டுக்கான வருமான வரியை செலுத்த முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் கூறிய காரணம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
![kangana ranaut says no work unable to pay half tax kangana ranaut says no work unable to pay half tax](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/kangana-ranaut-says-no-work-unable-to-pay-half-tax.jpg)
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சமீபகாலமாக செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மறைவை அடுத்து இந்திய அரசியல் அரங்கில் கங்கனாவின் கருத்துகள் பல்வேறு விவாதங்களை கிளப்பியது. இந்நிலையில், தான் இந்த ஆண்டுக்கான வருமான வரி செலுத்த முடியாதது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அதிகமாக வருமான வரி செலுத்துபவராக நான் இருக்கிறேன். கிட்டத்தட்ட எனது வருமானத்தின் 45% வருமானத்தை வருமான வரியாக செலுத்துகிறேன். ஆனால், கடந்த ஆண்டு வேலை ஏதும் இல்லாத காரணத்தால், வாழ்வில் முதன் முறையாக எனது வருமான வரியின் பாதித் தொகையை செலுத்த முடியவில்லை.
நான் தாமதமாக வருமான வரித்தொகையை செலுத்தி்யதால் அரசு மீதமுள்ள பணத்திற்கு வட்டியை விதித்துள்ளது. ஆனால், நான் இதனை வரவேற்கிறேன். தனி ஒரு நபருக்கு காலம் கடினமானதாக இருக்கலாம். ஆனால் நாம் ஒன்றிணைந்து அந்த காலத்தை விட கடினமாக இருப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, கங்கனா ரனாவத்தின் நடிப்பில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள தலைவி திரைப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)