'விடுதலைப் புலிகள் மீதான தடை உடைந்தது'!.. இங்கிலாந்து நீதிமன்றம் 'அதிரடி' தீர்ப்பு!.. தடை நீங்கியது எப்படி?.. தீர்ப்பின் பின்னணி என்ன?
முகப்பு > செய்திகள் > உலகம்விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என்று அந்த நாட்டின் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான சிறப்பு ஆணையம் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது.
இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடைக்கு எதிராக 2018-ல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடிதம் அனுப்பியது.
இங்கிலாந்தின் உள்துறை செயலாளர் சஜித் ஜாவித் எம்.பி.க்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டது. இக்கடிதத்தை 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் நிராகரித்தார். இதனையடுத்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தது.
இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு ஆணையத்தில் (Proscribed Organisations Appeal Commission) இந்த மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில், புலிகள் இயக்கம் இப்போது பயங்கரவாதத்தில் தொடர்புடையவர்கள் என நம்புவதற்கான நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் வாதிடப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சிறப்பு ஆணையம், விடுதலை புலிகள் இயக்கம் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என அதிரடி தீர்ப்பை வழங்கியது. மொத்தம் 38 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் விடுதலை புலிகள் மீதான தடை தவறானது என கூறப்பட்டுள்ளது.
இதனால், இங்கிலாந்தில் விடுதலை புலிகளுக்கு எதிரான தடை விரைவில் நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.