'கொரோனா வெச்சு செய்யுதுங்க.. முடியல!'.. அமலுக்கு வரும் ‘ரூல்ஸ் ஆஃப் சிக்ஸ்!’.. அவசர அவசரமாக அறிவித்த நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனில் கடந்த சில நாட்களாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் பிரிட்டனில் புதிய நடைமுறை அமலுக்கு வருகின்றது. குறிப்பாக நாளை முதல் ‘ஆறு விதி’ என்கிற புதிய விதிமுறை நடைமுறைக்கு வர உள்ளதால் இதை மீறுபவர்களுக்கு அபராதம் கடுமையாக விதிக்கப்படும் என்றும் இதனை மக்கள் சரியாக பின்பற்றாவிட்டால் மீண்டும் ஒரு பொதுமுடக்கம் அமல் படுத்தப்படலாம் என்றும் தெரிகிறது.
கொரோனா அதிகம் பரவி வருவதால் இப்படியே போனால் ஆபத்து என்று உணர்ந்த அரசு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் இந்த ஆறு விதியினை கொண்டுவந்துள்ளது. அதன்படி திருமணம் மற்றும் இறுதி ஊர்வலத்தின்போது 30 பேருக்கு மட்டும் அனுமதி, படிப்பு சம்மந்தமானவற்றில் 16 பேர் மட்டுமே கூடவேண்டும் பப்புகளில், பார்களில் 6 பேர் மட்டுமே கூட வேண்டும் என்றும் இந்த பட்டியல் நீளுகிறது. எனினும் பெரிய குடும்பங்க நிகழ்வுளுக்கு சிறு விலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதே சமயம் வேலைகளின் போதும், பள்ளிகளில் கல்விசார்ந்த நோக்கங்களுக்காகவும் 6-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
