'கொரோனாவால் சிங்கிள்ஸ்க்கு ரொம்ப கஷ்டம்'... 'சிங்கிள்ஸ் உங்க பாலியல் துணையை தேடிக்கோங்க'... அதிரடியா அறிவித்த நாடு!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | May 16, 2020 05:33 PM

திருமணமாகாதவர்கள் மற்றும் துணையில்லாதவர்கள் ஒரு சிறந்த பாலியல் துணையை தேடி கொள்ள வேண்டும் என நெதர்லாந்து அரசு அறிவித்துள்ளது.

Dutch government advises singletons to find sex buddy

கொரோனா தொற்று நோய் உலகம் முழுக்க பரவி இருக்கும் நிலையில், நெதர்லாந்து அரசின் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான தேசிய அமைப்பு, முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ''துணையில்லாத நபர்கள் தங்களுக்கான துணையை தேடி கொள்ள வேண்டும். அந்த வகையில் துணையை தேர்ந்தெடுக்கும் போது, அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால், அவர்கள் பாலியல் உறவில் ஈடுபடக்கூடாது'' என அந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையே துணையில்லாத நபர்களுக்கு எவ்வித பாலியல் ஆலோசனையும் அரசு வழங்கவில்லை என்ற குற்றசாட்டு எழுந்த நிலையில், இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் துணையில்லாதவர்களுக்கும் பாலியல் தேவை இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. பாலியல் உறவில்  ஈடுபட விரும்பும் துணையில்லாதவர்கள், கொரோனா தங்களுக்குப் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவ்வாறு கொரோனா தொற்று இருந்தால், சுய இன்பம் காண்பதே சிறந்த வழி எனவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நெதர்லாந்தில் 200 பேருக்கு கொரோனா தொற்றும், 53 மரணங்களும் பதிவாகியுள்ளது. மொத்தமான 43,880 கொரோனா தொற்றும், 5,500 மரணங்களும் இதுவரை அந்நாட்டில் பதிவாகியுள்ளது.