நெகிழ வைக்கும் 'கட்டிப்புடி' வைத்தியம்...! 'கொரோனா பாதித்த தாத்தா, பாட்டியை கட்டிப்பிடிக்க...' நூதன ப்ளான் பண்ணிய சிறுமி...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | May 16, 2020 06:13 PM

உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. மருந்து கண்டுபிடிப்பதில் ஒரு சில படிகள் முன்னேறினாலும் தடுப்பு மருந்துகள் இன்னும் பரிசோதனை முறையிலேயே இருக்கிறது. மேலும் கொரோனோவால் அதிகம் பாதிப்படைந்த நாடாக அமெரிக்கா பார்க்கப்படுகிறது.

A little girl invented a new way to tie her grandparents

இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த 10 வயது சிறுமியான லிண்ட்சே தனது தாத்தா பாட்டியை கட்டியணைக்க ஒரு புது வித்தையை வெளியிட்டுள்ளார். லிண்ட்சேவின் பாட்டியும், தாத்தாவும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து தற்போது இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நோயிலிருந்து மீண்டு வந்த தன் தாத்தா, பாட்டியை கட்டிப்பிடிக்க முடியாமல் போனதால், லிண்ட்சே தன் யோசனையில் ஒரு புதிய திரையை உருவாக்கியுள்ளார். பாலீத்தீன் பைகளால் ஆன, ஒரு ஆள் உயரம் இருக்கும் இந்த பெரிய திரையில் நடுவில் கட்டித் தழுவும் விதமாக கைகளை நுழைத்துக் கொள்ளும் பையையும் பசையால் ஒட்டினார். அதன்பின்னர் தாத்தா, பாட்டியை தன் விருப்பம் போல் கட்டியணைத்து மகிழ்ந்தார்.

கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவல் இருக்க அனைவரும் கடைபிடிக்க வேண்டியது சமூக இடைவெளி. ஆனால் இது வயதான ஒரு சில தாத்தா பாட்டிக்கு தன் பேரப்பிள்ளைகளை கட்டிப்பிடிக்காமல் இருக்க முடியாது. அவர்களை மாதிரியானவர்கள் லிண்ட்சே போல் பெரிய திரையை உருவாக்கி கட்டிப்பிடித்து கொள்ளலாம்.

Tags : #HUGS #CORONA