"சென்னையின் இந்த ஒரு மண்டலத்தில் மட்டும் 1,112 பேருக்கு கொரோனா!".. இந்தியாவில் '90 ஆயிரத்தை' தாண்டிய 'எண்ணிக்கை'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | May 17, 2020 11:23 AM

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல் வெளியாகியுள்ளது.

covid19 cases toll rises above 1000 in chennai royapuram

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,927ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 10 ஆயிரத்து 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 278 பேராக உயர்ந்துள்ளது.  இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல் வெளியாகியுள்ளது.

அதன்படி, சென்னையில் திருவிக நகரில் 750 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், 973 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து கோடம்பாக்கம் மண்டலம் இரண்டாம் இடத்திலும்,  1,112 கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து ராயபுரம் மண்டலம் முதல் இடத்திலும் உள்ளன. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 74 ஆக உள்ளது.