தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட் : 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' இன்னும் கூடுதல் தகவல்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | May 16, 2020 07:12 PM

தமிழகத்தில் இன்று (16-05-2020) மட்டும் சுமார் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

tn-coronavirus-covid19-updates-and-statistics-as-on-may-16

477 பேரில் சென்னையில் மட்டும் 332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6278 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஈரோட்டில் 31 நாட்களாகவும், திருப்பூரில் 15 நாட்களாகவும், கோவையில் 13 நாட்களாகவும் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.

மேலும் இன்று உறுதி செய்யப்பட்ட 477 பேரில் 384 பேர் தமிழ்நாட்டை சேர்த்தவர்கள் என்றும், 4 பேர் வங்காளத்தை சேர்ந்த டாக்கா நகரத்தை சேர்த்தவர்கள். மேலும் 81 பேர் மகாராஷ்டிரா, 7 பேர் குஜராத்  மற்றும் ஒருவர் ஆந்திராவை சேர்ந்தவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 477 பேரில் 302 ஆண்களும், 174 பெண்களும் என்ற எண்ணிக்கையையும் வெளியிட்டுள்ளனர். அதிகப்படியாக இன்று மட்டும் 939 பேர் உடல் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 10,585 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் ஆண்கள் 6945 பேர், பெண்கள் 3637 மற்றும் வேறு பாலினத்தவர் 3 பேர் ஆகும்.

இதுவரை சுமார் 3538 நோயாளிகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை 74 ஆக உள்ளது.

இன்று(16-05-2020) வரை  கொரோனா தொற்று பரிசோதனை செய்தவர்களின் எண்ணிக்கை 3,13,639 ஆகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் சுமார் 10,535 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 2,99,176 மாதிரிகளை ஆய்விற்கு உட்படுத்தியுள்ளனர். இன்று மற்றும் 8270 மாதிரிகளை ஆய்வு மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tags : #CORONA