'பெற்றோரை பார்க்க ஊருக்கு வந்த பெண்'... 'திடீரென வந்த EMAIL'... OVERNIGHTல் கோடீஸ்வரியாக மாறிய சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்உடல்நிலை சரியில்லாத பெற்றோரைப் பார்க்க வந்த இடத்தில் இளம்பெண் ஒருவர் கோடீஸ்வரியாக மாறியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்தவர் தீபா. இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார். இவரின் பெற்றோர் கேரளாவில் வசித்து வரும் நிலையில் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து தன்னுடைய பெற்றோரைப் பார்ப்பதற்குத் தீபா கேரளா சென்றுள்ளார். அப்போது அவருடைய மின்னஞ்சலுக்கு ஒரு தகவல் வந்துள்ளது.
அதில் Mahzooz குலுக்கலில் வெற்றி பெற்று Dh1,000,000 (இந்திய மதிப்பில் சுமார் 2 கோடி) வெற்றி பெற்றுள்ளீர்கள் எனத் தெரிய வந்தது. இதனால் மகிழ்ச்சியின் உச்சிக்குச் சென்ற அவர், 18 வருடங்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் எங்களுக்கு மிகவும் தித்திப்பான செய்தி என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இதற்கிடையே தீபா மற்றும் இவர் கணவர் இருவருமே Mahzooz குலுக்கலில் கலந்து கொண்டுள்ளனர். Mahzooz என்பது உங்களுக்கு அதிர்ஷத்தை கொடுப்பதாக நம்பப்படும் 6 எண்களைக் கொண்ட விளையாட்டு ஆகும். இதற்காக நீங்கள் www.mahzooz.ae இணையதளத்தில் சென்று ஒரு வாட்டர் பாட்டில் வாங்குவதன் மூலம் அதில் கலந்து கொள்ளலாம்.
அதன் பின் அந்த வாரத்தில் நடத்தப்படும் குலுக்கலில் அந்த எண் வந்தால் நீங்கள் வெற்றியாளர். அப்போது உங்களுக்கான பரிசுத் தொகை கொடுக்கப்படும். அந்த வகையில், Deepa மற்றும் அவரின் கணவர் சேர்ந்து இதில் கலந்து கொண்டு வந்துள்ளனர்.

மற்ற செய்திகள்
