சிறையில் அடைக்கப்பட்ட துபாய் இளவரசி 'அங்கு' இல்லையா...? 'இன்ஸ்டாகிராமில் வெளியான ரெண்டு ஃபோட்டோஸ்...' 'பேக்ரவுண்ட் பாக்குறப்போ...' - அதிர்ச்சியை கிளப்பும் பகீர் பின்னணி...!
முகப்பு > செய்திகள் > உலகம்தந்தையால் 3 வருடம் சிறையில் வைக்கப்பட்டவர் தற்போது நண்பர்களுடன் வெளியே சுற்றுவதாக புகைப்படம் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துபாய் மன்னரின் மகள் இளவரசி லத்திஃபா அமெரிக்காவில் சுதந்திரமான வாழ்க்கை வாழ தனது நாட்டிலிருந்து தப்பித்ததற்காக அவரது தந்தை மன்னர் ஷேக் முகமது அல் ஆல் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
லத்திஃபா அல் மக்தூம் ஆயுதம் ஏந்திய காவலரின் பாதுகாப்பில் தனது "வீட்டு சிறையில்" இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் லத்திஃபா தனது வழக்கறிஞர்களுடன் சட்டரீதியான பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது, இதன்பிறகு இளவரசி சிறையிலிருந்து வெளியேறி வேறொரு இடத்திற்கு சென்று தனது நண்பர்களுடன் புதிதாக தனது வாழ்க்கையை தொடங்கியதாகவும் தகவல் வெளியாகியள்ளது.
இந்த நிலையில், இளவரசியின் நெருங்கிய நண்பரான முன்னாள் ராயல் கடற்படை அதிகாரி சியோனட் டெய்லர், லத்திஃபா தனது நண்பருடன் இருக்கும் இரண்டு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது சில தினங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படம் எனத் தெரிகிறது.
ஆனால் அந்த புகைப்படங்கள் இரண்டும் ஒரே இடத்தில எடுக்கப்பட்டவை அல்ல. அதில் உள்ள ஒரு புகைப்படம் துபாயில் உள்ள ஏதோ பெரிய ஷாப்பிங் மாலில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் மற்றொன்று இத்தாலிய உணவகமான பைஸ் மாராவில் எடுக்கப்பட்டதாக உள்ளது.
புகைப்படங்களில் சரியான தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்படவில்லை என்றாலும், மே -3 அன்று துபாயில் வெளியான 'டெமோன் ஸ்லேயர்: முகன் ட்ரெயின்' திரைப்படத்திற்கான விளம்பரத்தினை புகைப்படத்தின் பின்னனியில் தெரிகிறது.

மற்ற செய்திகள்
