'தமிழக பெண் மருத்துவருக்கு கோல்டன் விசா'... 'பெருமைப்படுத்திய துபாய்'... பின்னணி காரணம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Aug 11, 2021 02:32 PM

தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஆயுர்வேத மருத்துவருக்கு கோல்டன் விசா வழங்கி துபாய் அரசு பெருமைப்படுத்தியுள்ளது.

UAE Present golden visa to Tamilnadu Ayurvedic doctor

தமிழகத்தின் திண்டிவனத்தைச் சேர்ந்தவர் டாக்டர் நஸ்ரின் பேகம். இவர் கடந்த கடந்த 2008 ஆம் ஆண்டு திருச்சி சங்கரா ஆயுர்வேத கல்லூரியில் படித்து மருத்துவராகியுள்ளார். இதையடுத்து மருத்துவ பணிக்காக 2013-ல் துபாய் சென்றார். 2017 ஆண்டு முதல் (MOH) மருத்துவ உரிமம் பெற்றார்.

இந்நிலையில், சபீர் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவர், கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாகத் துபாயில் ஆயுஸ் மெடிக்கல் டெரிட்ரி மேனேஜிங் பார்ட்னராக பணியாற்றி வருகிறார். மிகச்சிறிய நாடான துபாயில் சிறந்த முதலீட்டாளர்கள் மற்றும் பிசினஸ்மேன்களுக்கு 10 ஆண்டுகள் செல்லுபடியாகக்கூடிய கௌரவ விசாக்களை வழங்குவது அந்நாட்டு வழக்கமாகும்.

UAE Present golden visa to Tamilnadu Ayurvedic doctor

அமீரகத்தில் வசிக்கும் 6,800 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இத்தகையைக் கௌரவத்தைப் பெற்றுள்ளனர். இந்த விசாவை பெற்றவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் விசாவை புதுப்பித்தால் போதுமானது. இந்த விசாவை வைத்திருப்பவர்கள் அமீரகத்தின் குடிமகன்கள் போலவே கௌரவமாக நடத்தப்படுவார்கள்.

குறிப்பாகத் துபாயில் 20 கோடிக்கு மேல் முதலீடு செய்பவர்களுக்கு மட்டும்தான் கோல்டன் ஸ்டார் விசா வழங்குவார்கள். ஆனால், முதன்முறையாகத் தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஆயுர்வேத மருத்துவருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. UAE Present golden visa to Tamilnadu Ayurvedic doctor | World News.