என்னடா இது...! தங்க விலை விக்குது...? உலகத்துலையே 'காஸ்ட்லியான ஐஸ் கிரீம்...! - அப்படி என்ன ஸ்பெஷல்...?
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாக ஐஸ்கிரீம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட விரும்பும் ஒரு பொருள்

ஐஸ்கிரீம் பலவித ருசியுடன், பல ஆண்டுகளாக சாப்பிடப்பட்டு வந்தாலும் அதன்மீது இருக்கும் மோகம் இன்னும் குறையாமல், சொல்லப்போனால் இன்னும் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் துபாயில் ஒரு நிறுவனத்தில் ஐஸ்கிரீம் விலை ரூ.60,000-க்கு விற்பனை செய்கின்றனர்.
துபாயில் உள்ள ஸ்கூப்பி கபே என்ற நிறுவனம் 840 அமெரிக்க டாலரில், இந்திய மதிப்பில் சுமார் ரூ.60 ஆயிரம் ரூபாய்க்கு 'பிளாக் டைமண்ட்' என்ற ஐஸ்கிரீமை தயாரித்துள்ளனர்.
என்னடா இது தங்க விலை விற்கிறது என்று நினைப்பவர்களுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் தங்க இழைகளையே இதில் பயன்படுத்தி உள்ளனர்.
இந்த 'பிளாக் டைமண்ட்' ஐஸ்கிரீமில் 23 கேரட் தங்க இழைகள், சாப்ரான், பிளாக் ட்ரூபிள் ஆகிய பொருட்கள் கலக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் இந்த ஐஸ்கிரீமானது வெர்சேஸ் வகை பவுலில் பரிமாறப்படுகிறது.
தங்க ஐஸ்கிரீம் சாப்பிட குச்சியா கொடுக்க முடியும்? அதனால் ஐஸ்கிரீம் சாப்பிட வெள்ளி ஸ்பூனும் வழங்கப்படுகிறது. இந்திய நடிகையும் டிராவல் வ்லாகருமான ஷேனாஸ் டிரஷரி (Shenaz Treasury) என்பவர் இந்த ஐஸ்கிரீமை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டு அதிக லைக்களை வாங்கி வருகிறார்.

மற்ற செய்திகள்
