'உங்க தொகுதி எது?'... 'புதிதாக பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்கள்'... தொகுதிகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Oct 22, 2020 01:54 PM

தமிழகத்தில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட நிலையில், அதற்கான தேர்தல் உட்கட்டமைப்பைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

TN Election Commission released the list of newly created constituency

தமிழக அரசின் நிர்வாக வசதிக்காக விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு எனவும், வேலூர் மாவட்டம் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் எனவும், திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி, தென்காசி எனவும் பிரிக்கப்பட்டன. இதனால் மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆனது. இதனிடையே தமிழகச் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களில் அடங்கியுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள் குறித்துத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 11 சட்டப்பேரவைத் தொகுதிகள் முன்பு இருந்த நிலையில் தற்போது அது காஞ்சிபுரம், செங்கல்பட்டு எனப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில்  1.ஆலந்தூர், 2.ஸ்ரீபெரும்புதூர்(தனி), 3.உத்திரமேரூர், 4.காஞ்சிபுரம் ஆகியவை சட்டமன்றத் தொகுதிகள் ஆகும். செங்கல்பட்டு மாவட்டத்தில் 1.சோழிங்கநல்லூர், 2.பல்லாவரம், 3.தாம்பரம், 4.செங்கல்பட்டு, 5.திருப்போரூர், 6.செய்யூர் (தனி)7.மதுராந்தகம் (தனி) என 7 சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் 13 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருந்த நிலையில் அது வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளது. 1.காட்பாடி, 2.வேலூர், அணைக்கட்டு, 3.கீழ்வைத்தியனான் குப்பம் (தனி), 4.குடியாத்தம் (தனி). ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1.அரக்கோணம் (தனி), 2.சோளிங்கர், 3.ராணிப்பேட்டை, 4.ஆற்காடு என 4 தொகுதிகள் இடம்பெற்றுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 1.வாணியம்பாடி, 2.ஆம்பூர், 3.திருப்பத்தூர், 4.ஜோலார்பேட்டை என 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருந்த நிலையில் அது விழுப்புரம், கள்ளக்குறிச்சி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் 1.விழுப்புரம், 2.செஞ்சி, 3.மைலம், 4.திண்டிவனம் (தனி), 5.வானூர் (தனி), 6.விக்கிரவாண்டி, 7.திருக்கோயிலூர் என 7 தொகுதிகள் இடம்பெற்றுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1.உளுந்தூர் பேட்டை, 2.ரிஷிவந்தியம், 3.சங்கராபுரம், 4.கள்ளக்குறிச்சி (தனி) என 4 தொகுதிகள் இடம்பெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருந்த நிலையில், இது திருநெல்வேலி, தென்காசி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தில் 1.திருநெல்வேலி, 2.அம்பாசமுத்திரம், 3.பாளையங்கோட்டை, 4.நாங்குநேரி, 5.ராதாபுரம். என 5 சட்டப்பேரவைத் தொகுதிகளும், தென்காசி மாவட்டத்தில் 1.சங்கரன்கோவில் (தனி, 2.வாசுதேவநல்லூர் (தனி), 3.கடையநல்லூர், 4.தென்காசி, 5.ஆலங்குளம். என 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. TN Election Commission released the list of newly created constituency | Tamil Nadu News.