'இத எப்படி சார், என் வாயால சொல்லுவேன்'... 'உயிரை காப்பாற்றி கொள்ள மனசாட்சி இல்லாமல் செய்தியாளர் சொன்ன விஷயம்'... பல்ஸை எகிறவைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானின் உண்மை நிலவரத்தைப் புரிந்து கொள்ள இந்த ஒரு வீடியோ மட்டுமே போதும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற ஆரம்பித்ததிலிருந்தே நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளையும் தாலிபான்கள் கைப்பற்றி விட்டனர். இனிமேல் பெண்கள் குழந்தைகளின் நிலை என்ன ஆகப் போகிறது எனச் சிந்திப்பதற்குள் தாலிபான்கள் அவர்களின் உண்மை முகத்தைக் காட்ட ஆரம்பித்து விட்டார்கள்.
தாலிபான்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத ஆப்கான் மக்கள் எப்படியாவது தங்களது நாட்டை விட்டுத் தப்பிக்க வேண்டும் என்று காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர். அதே நேரத்தில் ஆப்கானிலேயே இருக்கப் போகும் மக்கள் இனிமேல் தங்கள் வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறதோ என்பது தான் பெரும் அச்சமாக உள்ளது.
தற்போது அந்த அச்சத்தை மெய்ப்பிக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ''தாலிபான்களைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும் அவர்கள் நல்லவர்கள், யாருக்கும் தீங்கு செய்யமாட்டார்கள் என்று ஒரு செய்தி வாசிப்பாளர் மரண பீதியில் செய்தி வாசிக்கும் போது அவரது பின்னால் துப்பாக்கி முனையில் தாலிபான்கள் நிற்கும் காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது''.
தாலிபான்கள் எவ்வளவு கொடுமையானவர்கள் என்பதை இதைவிட யாராலும் சொல்லி விட முடியாது என அரசியல் நோக்கர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
This is surreal. Taliban militants are posing behind this visibly petrified TV host with guns and making him to say that people of #Afghanistan shouldn’t be scared of the Islamic Emirate. Taliban itself is synonymous with fear in the minds of millions. This is just another proof. pic.twitter.com/3lIAdhWC4Q
— Masih Alinejad 🏳️ (@AlinejadMasih) August 29, 2021
The programme is called Pardaz. In this longer video, the presenter interviews a Taliban fighter who presumably outranks the rest of the lot in the studio. The presenter switches from Dari to Pashto, which unfortunately I don't speak.pic.twitter.com/qPWexsQd2T
— Kian Sharifi (@KianSharifi) August 29, 2021