'இந்த மனுஷன் போல சம்பளம் வாங்குனா எப்படி இருக்கும்'... 'இளைஞர்களின் கனவு நாயகன் ஆப்பிள் CEO'... இந்த ஆண்டு ஊதியம் எவ்வளவு தெரியுமா?
முகப்பு > செய்திகள் > வணிகம்ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ டிம் குக் இந்த ஆண்டு வாங்கும் ஊதியம் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
உலக அளவில் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மென்பொருள் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளாக பணியாற்றி வருபவர்கள் வருடத்திற்கு அதிகமாகச் சம்பளம் வாங்கும் நபராக இருந்து வருகிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்துவருகிறார்.
அவர், 2015-2020-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் 80,000 கோடி ரூபாயை ஊதியமாகப் பெற்றுள்ளார். அந்த வகையில் தற்போது, 10 ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓவாக இருக்கும் டிம் குக்கின் இந்த ஆண்டு வருமானம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான பிராண்டான ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் போனை வாங்கி விட வேண்டும் என்பது நிச்சயம் பெரும்பாலானவர்களின் கனவாக இருக்கும். அந்த வகையில் ஆப்பிள் சி.இ.ஓ டிம் குக் குறித்த விவரங்களை அறிந்து கொள்வதிலும் இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகம்.
ஸ்டீவ் ஜாப் மறைவிற்குப் பின்னர் 2011-ம் ஆண்டு ஆப்பின் சி.இ.ஓ.வாக டிம் குக் பொறுப்பேற்றார். 10 ஆண்டுகள் இவர் இந்தப் பணியில் இருப்பார் என ஒப்பந்தம் போடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டிலும் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு மதிப்பிற்கேற்ப இவருக்கு ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஒப்பந்தத்தின் கடைசி ஆண்டான 2021-ல் இவருக்கு 750 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 5,518 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இவர் ஆப்பிள் சி.இ.ஓ.வாக பொறுப்பேற்ற இந்த 10 ஆண்டுகளில் அந்த நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 1,200 மடங்கு அதிகரித்து, 2 டிரில்லியன் டாலர் என்ற புதிய உச்சத்தையும் தொட்டது குறிப்பிடத்தக்கது.