'லாட்டரி டிக்கெட் வாங்கிட்டு...' இப்படியா கவனக்குறைவா இருப்பாங்க...? - எல்லாம் சரியா நடந்திருந்தா இந்நேரம் 'கொடிகட்டி' பறந்திருக்கலாம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்மேற்கத்திய நாடுகளிலும், அரபு நாடுகளிலும் லாட்டரி டிக்கெட் விற்கும் முறை இன்னும் புழக்கத்தில் உள்ளது. அதனால் ஒரே இரவில் கோடிகளுக்கு சொந்தமானவர்களின் கதையையும் செய்திகளில் கேட்கிறோம்.
அதேபோல் தான்,கலிபோர்னியாவில் பெண் ஒருவர் வாங்கிய லாட்டரியில் சுமார் 26 மில்லியன் டாலர் (190 கோடி) விழுந்துள்ளது. ஆனால் லாட்டரி சீட்டை பெற்று பணத்தை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
என்ன காரணம் என்றால், பொதுவாக லாட்டரி வாங்கியாவர்களே நேரடியாக வந்து, உரிய ஆவணங்களை சமார்பிக்க வேண்டும். ஆனால் லாட்டரி சீட்டை வாங்கியதாக ஒரு பெண் வந்து லாட்டரி டிக்கெட்டை தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்ததாகவும். துணியை துவைத்தபோது அது நீரில் கரைந்து போய் விட்டதாகவும் கூறியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த கடையின் மேலாளர் கே.டி.எல்.ஏ-டிவியிடம், சிசிடிவி வீடியோவில் டிக்கெட்டை வேறொரு பெண் வாங்கியதாகவும், இப்போது வந்தவர் பணத்தை வாங்க வந்தவர் என்றும் உறுதிப்படுத்தினர்.
அதன்பின் அடுத்த நடவடிக்கையாக கண்காணிப்பு வீடியோவின் நகலை கலிபோர்னியா லாட்டரி அதிகாரிகளுக்கு திருப்பி அனுப்பியதாக மேலாளர் தெரிவித்தார்.
லாட்டரி செய்தித் தொடர்பாளர் கேத்தி ஜான்ஸ்டன் இதுகுறித்து கூறுகையில், லாட்டரி வாங்கிய பெண் வரமுடியாத காரணத்தினால், தற்போது வந்துள்ள மற்றொரு பெண் வந்துள்ளார். டிக்கெட் வாங்கிய பெண் சொல்லி தான் வந்துள்ளார் என்றாலும், யாராவது ஒரு டிக்கெட் வாங்கியது குறித்த ஆதாரங்களை அவர்கள் வழங்க வேண்டும்.
அதாவது டிக்கெட்டின் முன் மற்றும் பின்புறம் உள்ள புகைப்படம் உள்ளிட்ட ஏதேனும் ஒன்று வேண்டும். ஆனால் தங்களிடம் எந்த ஆதாரமும் இல்லாமல் இருப்பதால் பணத்தை வாங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. என்ன முடிவு எடுக்கலாம் என்பது குறித்து அதிகாரிகளும் குழப்பமடைந்துள்ளனர்.