'பிறந்த நாளை மறந்த அண்ணன்'... 'ஐய்யயோ, அவசர கதியில் வாங்கி கொடுத்த பரிசு'... தங்கையின் வாழ்க்கையை புரட்டி போட்ட அந்த GIFT!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Apr 26, 2021 04:58 PM

தங்கையின் பிறந்த நாளை மறந்த அண்ணன் அவசர கதியில் வாங்கி கொடுத்த பரிசு, தங்கையின் வாழ்க்கையையே மாற்றியுள்ளது.

Belated birthday gift from brother earns woman 5 Lakh Dollars Lottery

அமெரிக்காவைச் சேர்ந்தவர் Elizabeth Coker-Nnam. இவருக்குக் கடந்த மாதம் பிறந்த நாள் வந்தது. அவரின் பிறந்த நாளுக்கு Elizabethயின் நண்பர்கள் எனப் பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். சிலர் Elizabethக்கு பிறந்த நாள் பரிசையும் வழங்கினார்கள். எந்த வருடமும் சரியாகத் தங்கைக்கு வாழ்த்து தெரிவிக்கும் அவரது அண்ணன், இந்த பிறந்த நாளை மறந்தே போய்விட்டார்.

Belated birthday gift from brother earns woman 5 Lakh Dollars Lottery

சில நாட்கள் கழித்து தங்கை Elizabethயின் பிறந்த நாள் நினைவுக்கு வர, ஐயோ இப்படி மறந்து விட்டோமே என எண்ணி, என்ன பிறந்த நாள் பரிசு வாங்கி கொடுப்பது எனத் தெரியாமல் அவசர கதியில் ஒரு லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். சில நாட்களில் Elizabeth லாட்டரி சீட்டு குறித்து சுத்தமாக மறந்து போனார்.

பின்னர் பல வாரங்களுக்குப் பின் ஒரு நாள் அண்ணனும் தங்கையும் தொலைப்பேசியில்    பேசிக்கொண்டிருக்கும்போது, அந்த லொட்டரி டிக்கெட் என்ன ஆயிற்று என்று கேட்டிருக்கிறார் அண்ணன். அதைத் தான் மறந்தே போனதாகக் கூறிய Elizabeth, உடனே அதை எடுத்துச் சோதித்திருக்கிறார். அப்போது அவர் எதிர்பாராத ஒரு ஆச்சரியம் அவருக்குக் காத்திருந்திருக்கிறது.

Belated birthday gift from brother earns woman 5 Lakh Dollars Lottery

Elizabethக்கு அந்த லொட்டரியில் முதல் பரிசு விழுந்திருப்பது தெரியவந்தது. 500,000 டாலர்கள் பரிசு பெற்று, ஒரே நாளில் கோடீஸ்வரியாகிவிட்டார் Elizabeth. அண்ணனும் தங்கையும், தொலைப்பேசியிலேயே கத்திக் கூச்சலிட்டு தங்கள் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

Belated birthday gift from brother earns woman 5 Lakh Dollars Lottery

தங்கை கோடீஸ்வரியானதை அறிந்து மகிழ்ச்சியில் திளைத்த Elizabethயின் அண்ணன், இது தெரிந்திருந்தால் அந்த டிக்கெட்டை நானே வைத்திருந்திருப்பேனே என வேடிக்கையாகக் கூறியுள்ளார். அதற்கு Elizabeth கவலைப்படாதீர்கள், உங்கள் பிறந்தநாளுக்கு மறக்க முடியாத ஒரு பரிசு தருகிறேன் சிரித்துக்கொண்டே கூறியுள்ளார். அவசர கதியில் வாங்கி கொடுத்த பிறந்த நாள் பரிசு ஒருவரின் வாழ்க்கையையே மாற்றியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Belated birthday gift from brother earns woman 5 Lakh Dollars Lottery | World News.