'குணமடைந்த' பின்னும் 'பாசிடிவ்னு' முடிவு வருதா? 'கவலைப்படாதிங்க...' 'அது அப்படித்தான்...' 'விஞ்ஞானிகள் கூறிய ஆறுதலான விஷயம்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | May 20, 2020 06:46 PM

கொரோனாவில் இருந்து குணமான பின்னரும் சோதனையில் பாசிடிவ் என முடிவு வரும் நபர்களிடம் இருந்து தொற்று பரவாது என தென்கொரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Why is a healed corona patient positive on repeat tests?

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த சிலருக்கு மீண்டும் நடத்தப்பட்ட சோதனையில் பாசிடிவ் என முடிவுகள் வந்தது மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வந்தது. இந்நிலையில், குணமடைந்த பின்னரும் பாசிடிவ் என முடிவு வந்த 285 பேரின் மாதிரிகளை தென்கொரிய மருத்தவர்கள் ஆய்வு செய்தனர்.

அப்போது கொரோனா வைரஸ் அணுக்கரு மீது நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் உயிருள்ள வைரசையும், இறந்த வைரசையும்  வித்தியாசப்படுத்த முடியாததால் மறு சோதனையில் தொற்று இருப்பதாக காட்டுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இறந்த வைரஸ்கள் அல்லது தொற்று திறன் இல்லாத வைரஸ்கள் மட்டுமே உடலில் தங்கியுள்ளதால், அவர்களால் மற்றவர்களுக்கு தொற்று பரப்ப முடியாது என்ற முடிவுக்கு தென்கொரிய விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.