ரயில்வே டிராக்கில் இருசக்கர வாகனத்துடன் சறுக்கிய நபர்..100 கிமீ வேகத்தில் வந்த ரயில்.. கதிகலங்கும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பையில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் வந்த ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கி இரு சக்கர வாகனம் ஒன்று சின்னாபின்னாமான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
வீட்டுக்குள் தோண்டப்பட்ட 'குழி'.. கதவைத் திறந்ததும் ஆடிப் போன அண்ணன்.. தூங்கியதால் சிக்கிய 'தம்பி'
மும்பையில் லெவல் கிராசிங்கை ரஞ்சித் தேஷ்பாண்டே என்பவர் இரு சக்கர வாகனத்தில் கடக்க முயற்சித்திருக்கிறார். அந்த நேரம் பார்த்து ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் 100 கிலோமீட்டர் வேகத்தில் வந்திருக்கிறது. இதனால் வேகத்துடன் ரயில்வே டிராக்கை கடக்க தேஷ்பாண்டே முயற்சித்திருக்கிறார்.
தவறி விழுந்த தேஷ்பாண்டே
லெவல் கிராஸிங்கில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தேஷ்பாண்டே டிராக்கில் தவறி விழுந்த சில நொடிகளில் ரயில் அவரை நெருங்கிவிட்டது. இதனால் தேஷ்பாண்டே அச்சமடைந்தாலும் துரிதமாக யோசித்த அவர், துரிதமாக செயல்பட்டு உயிர்பிழைத்தால் போதும் என எழுந்து தண்டவாளத்தில் இருந்து ஓடினார்.
இரு சக்கர வாகனத்தை ரயில்வே தண்டவாளத்தில் விட்டுவிட்டு உடனடியாக ஓடிவந்தார் தேஷ்பாண்டே. அடுத்த சில வினாடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தில் வந்த ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ்-ல் சிக்கி சின்னாபின்னாமானது.
இதனை அருகில் இருந்து பார்த்த மக்கள் பயத்தினால் சத்தம் எழுப்பினர். ரயில்வே விபத்தில் நொடிப் பொழுதில் இளைஞர் உயிர்பிழைத்த இந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
சாக்கு மூட்டை
தப்பித்தோம் பிழைத்தோம் என ரயில்வே டிராக்கில் இருந்து விலகி ஓடிய தேஷ்பாண்டே ரயிலில் சிக்கிய இருசக்கர வாகனத்தை சாக்கு மூட்டையில் அள்ளிச் சென்றார்.
இரு சக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோல் டேங்க் வெடித்திருக்கும் பட்சத்தில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும்.
எனவே, ரயில்வே போலீஸார் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இரு சக்கர வாகன ஓட்டிகள் சில நிமிடங்களை சேமிக்க இது போன்று உயிரோடு விளையாடக்கூடாது என அதிகாரிகளும், வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தெரிவித்தனர்.
Smithereens 2022... bike and train🙂🙂🙂 https://t.co/alAgCtMBz5 pic.twitter.com/jBwFDeGGYA
— Rajendra B. Aklekar (@rajtoday) February 14, 2022