வீட்டுக்குள் தோண்டப்பட்ட 'குழி'.. கதவைத் திறந்ததும் ஆடிப் போன அண்ணன்.. தூங்கியதால் சிக்கிய 'தம்பி'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Feb 15, 2022 11:27 AM

திருவள்ளூர் அடுத்த கூடப்பாக்கம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா (வயது 48). இவர் தனது கணவர் ஆனந்துடன் குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

thiruvallur son behave as bad after his mother advice

கல்யாணம் ஆனவங்கன்னா 1 தான்.. பேச்சுலர்னா 2 இலவசம்.. வித்தியாசமாக யோசித்த மாப்பிள்ளை வீட்டார்.. கேட்டா ‘ஷாக்’ ஆகிடுவீங்க..!

இந்த தம்பதியருக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில், மூத்த மகன் ராம்தாஸுக்கு திருமணம் முடிந்துள்ளது. அதே போல, ஒரே மகளுக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்கள் இருவரும், தங்களின் குடும்பத்தினருடன் தனியாக வசித்து வந்துள்ளனர்.

மல்லிகாவின் கணவரும், வேலையின் பெயரில் வெளியூர் சென்றிருந்த நிலையில், தனது இளைய மகன் ஜெயபாலுடன், மல்லிகா மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.

மகன் செய்த அதிர்ச்சி செயல்

ஜெயபால் வேலைக்கு எதுவும் செல்லாமல், வெட்டியாக ஊரைச் சுற்றி வந்துள்ளார். இது குறித்து பேசிய தாய் மல்லிகா, இளைய மகனைத் திட்டியுள்ளார். வேலைக்கு போகாமல், ஊதாரித் தனமாக ஊரை சுற்றுவதற்கு பதில், வேலைக்கு சென்றால் தான், ஊரார் உன்னை மதிப்பார்கள் என்றும் மல்லிகை அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. இதன் பெயரில், மல்லிகா மற்றும் ஜெயபால் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றவே, தாயின் திட்டியதால், கடும் கோபத்தில் இருந்த ஜெயபால் அதிர்ச்சி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

வீட்டில் இருந்த கத்தியை எடுத்த ஜெயபால், தனது தாயின் கழுத்தை அறுத்து, தீர்த்து கட்டியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, தனது தாயின் உடலை என்ன செய்வது என்று தெரியாமல், ஜெயபால் யோசித்துக் கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

வீட்டிற்குள்ளே குழி

அதன் பின்னர், உயிரிழந்த மல்லிகாவை, வீட்டிற்குள்ளேயே குழி தோண்டி புதைக்க, ஜெயபால் முடிவு செய்துள்ளார். இதற்கான பணிகளிலும் ஜெயபால் ஈடுபட்டு வந்த நிலையில், இரவு நேரத்தில் அவர் சோர்வு அடைந்ததாக தெரிகிறது. இதன் பெயரில், அங்கயே ஜெயபால் தூங்கி போய் விட்டார்.

thiruvallur son behave as bad after his mother advice

அதிர்ந்து போன அண்ணன்

தொடர்ந்து, அதிகாலை மீண்டும் எழுந்த ஜெயபால், திரும்பி குழி தோண்ட தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. அந்த நேரம் பார்த்து வீட்டிற்கு, ஜெயபாலின் அண்ணன் ராம்தாஸ் வந்துள்ளார். சகோதரரின் செயலைக் கண்ட ராமதாஸிடம், தாயை கொலை செய்து விட்டு, வீட்டிற்குள்ளேயே குழி தோண்டி புதைக்கப் போவதாகவும் ஜெயபால் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ந்து போன ராமதாஸ், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளார்.

போலீசார் விசாரணை

தொடர்ந்து, அங்கு வந்து போலீசார், மல்லிகாவின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்கு வேண்டி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், ஜெயபாலைக் கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலைக்கு போகாமல் இருந்ததற்காக தாய் திட்டியதால், அவரை தீர்த்து கட்டி விட்டு, வீட்டிலேயே குழி தோண்டி புதைக்கத் தயாரான மகனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

சென்னையில் Live in together-ல் வாழ்ந்த காதலர்கள்.. திடீரென வீட்டுக்குள் கேட்ட அலறல் சத்தம்.. அதிர்ச்சி சம்பவம்..!

Tags : #THIRUVALLUR #SON #BEHAVE AS BAD #MOTHER #MOTHER ADVICE #அண்ணன் #தம்பி #திருவள்ளூர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Thiruvallur son behave as bad after his mother advice | Tamil Nadu News.