VIDEO: ஒரு கோடி கொடுத்து ஆசையா வாங்கிய 'டெஸ்லா' காரை 'தீ' வச்சு கொளுத்திய நபர்...! என்ன காரணம்...? - டிரெண்டிங் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > உலகம்டெஸ்லா காரை சர்வீஸ் செய்ய 17 லட்சம் கேட்ட நிறுவனத்தை அதிர வைக்கும் நிலையில் காரையே கொளுத்தியுள்ளார் காரின் உரிமையாளர்.
தெற்கு பின்லாந்தின் கைமன்லாக்ஸோ அடுத்த ஜாலா கிராமத்தில் வசிக்கும் டூமஸ் கைட்டனன் என்பவர் கடந்த 2013-ஆம் ஆண்டு ஆசைப்பட்டு டெஸ்லா நிறுவனத்தின் காரை வாங்கியுள்ளார். ஆட்டோமொபைல் துறையில் புதுமைகள் மற்றும் புதிய தொழில்நுட்பத்துடன் எலக்ட்ரானிக் வாகனத்துறையில் முன்னணியில் இருப்பது டெஸ்லா நிறுவனம். இதனால் டெஸ்லா நிறுவனத்தின் பெயர் மீது நம்பிக்கை வைத்து சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை வாங்கியுள்ளார் டூமஸ் கைட்டனன்.
டூமஸ் வசிப்பது குறைவான வீடுகள், மரங்கள், மக்கள் தொகை பனிப்பிரதேசம் சூழ்ந்த இடமாகும் என்பதால் இதுவரை அவர் குறைந்தது 1500 கிலோமீட்டரே அந்த காரை ஓட்டியுள்ளார். குறைந்த தூரமே ஓட்டிய நிலையில் கடந்த மாதம் அந்த காரில் பழுது ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், டெஸ்லா சர்வீஸ் நிறுவனத்திற்கு தன் காரை கொண்டு சென்று காட்டியுள்ளார். சுமார் ஒரு மாதம் காரை பரிசோதித்த மெக்கானிக்குகள் இந்த காரின் பழுதை நீக்க முடியாது என கூறியதோடு பேட்டரி உள்ளிட்ட பொருடகளை மாற்றவேண்டும். அதை மாற்றுவதற்கு சுமார் 20 ஆயிரம் யூரோக்கள் செலவாகும் எனவும் கூறியுள்ளனர்.
இது இந்திய மதிப்பில் சுமார் 17 லட்சம் ரூபாய். கார் வாங்கி சுமார் 1500 கிலோ மீட்டர் பயணத்தை கூட தாண்டாத நிலையில் அதை சர்வீஸ் செய்ய இவ்வளவு பணமா என்று உரிமையாளர் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளார் டூமஸ்.
இப்போது 20,00,000 ருபாய் கொடுத்து சரி செய்தாலும் மீண்டும் அடுத்த 1500 கிலோ மீட்டரில் பிரச்சனை வருமோ எனவும் சந்தேகம் அடைந்தார். 1 கிலோ மீட்டருக்கு சர்வீஸ் கட்டணம் சுமார் ஆயிரத்து 100 ரூபாய் செலவும் கூட என சொல்லியுள்ளனர்..
இவ்வளவு செலவு செய்து இந்த காரை சர்விஸ் செய்யவேண்டுமா என நினைத்த காரின் உரிமையாளர் டூமஸ் தான் வாங்கிய காரை வெடி வைத்து தகர்த்த திட்டமிட்டுள்ளார். அந்த கிராமத்தில் இருந்த தன் நண்பர்களை அழைத்து அதற்கான பணிகளையும் செய்து முடித்துள்ளார்.
சுமார் 30 கிலோ டைனமைட் வெடிபொருள் வாங்கி வரப்பட்டதோடு, காரை சுற்றிலும் ஜெலட்டின் வெடிமருந்து குச்சிகள் இறுக்கமாக கட்டப்பட்டு காரின் ஓட்டுநர் இடத்தில் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை அதிகாரியின் உருவபொம்மையை அமரவைத்துள்ளனர்.
காரை கொழுத்திய நிலையின் அது வெடித்து பாறைகளும் பனிகளும், காரின் உதிரிபாகங்களும் வானாளவிய உயரத்திற்கு சென்று கீழே விழுந்தன. இந்த வீடியோ அங்கிருந்த மக்களால் பதிவு செய்யப்பட்டு இணையத்தில் பதிவிடப்பட்டது.
சமூகவலைத்தளங்களில் வைரலான இந்த வீடியோ சில மணிநேரங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமாகி ட்ரெண்ட் ஆனது.