கேக் 'கட்' பண்றதுக்கு முன்னாடி... 'கேண்டில ஊதி அணைச்சப்போ, திடீர்னு யாரும் எதிர்பாரதாவிதமாக...' - சுத்தி நின்னவங்களோட 'இதயம்' ஒரு நிமிஷம் நின்னு போச்சு...!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகை ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அமெரிக்காவை சேர்ந்த தொலைக்காட்சி பிரபலமும் நடிகையுமான நிக்கோல் ரிச்சி (nicole richie) நேற்று முன்தினம் (22-09-2021) தன்னுடைய 40-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
அப்போது, பிறந்த நாள் கொண்டாடத்தின் போது பிறந்தநாள் கேக்கில் சுற்றி மெழுகுவர்த்தி கொளுத்தி வைக்கப்பட்ட நிலையில், அந்த மெழுகுவர்த்திகளை அணைப்பதற்காக முகத்தை கேக்கின் அருகே கொண்டு சென்று அணைக்க முயன்றுள்ளார் நிக்கோல்.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக திடீரென அவரது கூந்தல் முனை தீயில் பட்டு கபகபவென எரிந்துள்ளது. அதை பார்த்து சுதாரித்துக் கொள்வதற்குள் அவரின் முடி முழுவதும் தீப்பற்றி, அவரின் ஆடையிலும் தீ சிதறியது. சுற்றி நின்றவர்கள் ஒரு வினாடி உறைந்து போயினர்.
அதன்பின், அருகிலிருந்த நண்பர்கள் தீயை உடனடியாக அணைத்தபின் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில், நடிகை நிக்கோல் தன்னுடைய தீ பற்றி சோகமான நாளாக மாறிய பிறந்தநாள் வாழ்வில் மறக்க முடியாத பிறந்த நாளாக மாறியுள்ளது. மேலும், இந்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். சிலர் அவரை கிண்டல் செய்தும் வருகின்றனர்.

மற்ற செய்திகள்
