'இனி எல்லாமே ஹைபிரிட் வாகனங்கள் தான்!'.. டார்கெட் குறிச்சாச்சு! பெட்ரோல் வாகனங்களை முழுவதும் அகற்ற முடிவெடுத்த நாடு.. அசர வைக்கும் ப்ளான்!
முகப்பு > செய்திகள் > உலகம்அடுத்த 15 ஆண்டுகளில் பெட்ரோல் மூலம் இயங்கக் கூடிய வாகனங்களை முற்றிலும் அகற்றுவதற்கு ஜப்பான் முனைப்புடன் இருக்கிறது. 2050ஆம் ஆண்டு வாக்கில் ஜப்பான் நிகர பூஜ்ஜிய கார்பன் வெளியேற்றத்தை அடைந்து வருடத்துக்கு சுமார் 2 டிரில்லியன் டாலர் பசுமை வளர்ச்சியை (green growth strategy) உருவாக்கும் திட்டத்தில் இருப்பதாக தெரிவித்திருக்கிறது.
ஹைட்ரஜன் மட்டும் வாகனத் தொழில்களைக் குறிவைத்து பசுமை வளர்ச்சி திட்டம் என்கிற பெயரில் உருவாகியிருக்கும் இந்த திட்டத்தின்படி இந்த நூற்றாண்டின் மையப்பகுதியில் நிகர பூஜ்ஜிய அடிப்படையில், கார்பன் வெளியேற்றத்தை அகற்றுவதாக பிரதமர் யோஷிஹைட் சுகா அக்டோபரில் கூறிய உறுதிமொழியை அடைவதற்கான செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளது ஜப்பான்.
உலகம் முழுவதும் பல நாடுகள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை புதுப்பித்து வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா மற்றும் பிற பொருளாதார நாடுகளை தொடர்ந்து இந்தத் திட்டத்தை பசுமை முதலீட்டிற்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக பிரதமர் நிர்ணயிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பசுமை முதலீட்டின் மூலமாக 2030ஆம் ஆண்டு அளவுக்கு 870 பில்லியன் டாலர் இலக்கையும், 2050ஆம் ஆண்டு வாக்கில் 1.8 பில்லியன் டாலர் இலக்கையும் குறிவைத்து பணியாற்றும் நிறுவனங்களுக்கு வரி சலுகைகள் மற்றும் பிற நிதி உதவிகளை அரசாங்கம் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் பெருநிறுவன முதலீடுகளை ஆதரிக்கும் விதமாக 2 டிரில்லியன் மதிப்பிலான பசுமை நிதி வழங்கப்பட உள்ளது. இதனால் 2030-களின் நடுப்பகுதியில் ஹைபிரிட் மற்றும் எரிபொருள் வாகனங்கள் உள்ளிட்ட மின்சார வாகனங்களால் பெட்ரோல் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு ஒரு முடிவு கட்ட இந்த திட்டம் முனைகிறது. 2030 ஆம் ஆண்டளவில் வாகன பேட்டரிகளின் விலையைக் குறைக்கவும், அரசாங்கம் இலக்கை நிர்ணயித்து வைத்திருக்கிறது. மின்சார வாகனங்களை விரிவுபடுத்துவதற்காக இதை செய்வதாகவும் தெரிகிறது. மின்உற்பத்தி மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளில் ஹைட்ரஜன் நுகர்வை 2030ஆம் ஆண்டில் 3 மில்லியன் டன்னாகவும் 2050ஆம் ஆண்டு வாக்கில் 20 மில்லியன் டன்னாகவும் உயர்த்துவதை இந்த திட்டம் நோக்கமாக கொண்டிருக்கிறது.
கடல் காற்று மற்றும் அம்மோனியா எரி பொருள் போன்ற 14 தொழில்களை முன்வைத்து 2040க்குள் 45 ஜிகாவாட் கடல் காற்று சக்தியை நிறுவுவதை இந்த திட்டம் இலக்காகக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.