எங்க நமக்கும் கொரோனா வந்திடுமோ...?! 'காச பார்த்தா உயிர் வாழ முடியாது...' - உச்சக்கட்ட கொரோனா பயத்தில் 'வேற லெவல்' முடிவு எடுத்த நபர்...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பரவலிலிருந்து தப்பிக்க முகக்கவசங்களை அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது என தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமான ஒன்று ஆகும்.

ஆனால், இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த ஒருவர், இவை அனைத்தையும் தூக்கி சாப்பிடும் அளவிற்கு ஒரு காரியத்தை செய்துள்ளார் என்றே கூற வேண்டும்.
கடந்த ஜனவரி 4-ஆம் தேதி ரிச்சர்ட் முல்ஜாடி என்பவர் அவரது மனைவியுடன் விமானத்தில் பயணித்துள்ளார். விமானத்தில் பிற பயணிகளுடன் பயணித்தால் எங்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அவர் மொத்த விமானத்தையுமே புக் செய்துள்ளார். காலியான விமானத்தில் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தையும் ரிச்சர்ட் முல்ஜாடி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், "தனியார் ஜெட் விமானத்தில் செல்லும் செலவைவிட இந்த விமானத்தில் இருக்கும் அனைத்து டிக்கெட்டுகளையும் புக் செய்யக் குறைந்த செலவே ஆனது" என்று பதிவிட்டிருந்தார்.
விமானத்தில் வேறு எவரும் ஏறவில்லை என்பதை உறுதி செய்ததாகவும் பிற பயணிகள் இருந்தால் விமானத்தில் பயணிக்க வேண்டாம் என முடிவு செய்திருந்ததாகவும் அவர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ரிச்சர்ட் முல்ஜாடி கூறியுள்ளதை விமான நிறுவனம் மறுத்துள்ளது. ரிச்சர்ட் முல்ஜாடி வெறும் 2 டிக்கெட்டுகளை மட்டுமே புக் செய்ததாக இந்தோனேஷியா செய்தி நிறுவனத்திடம் விமான நிறுவனம் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்
