"21 வருஷத்துக்கு அப்புறமா.." மண்ணில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட முல்லா உமரின் கார்.. வைரலாகும் புகைப்படம்
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த 2001 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தின் மீது, தாலிபான்கள் தாக்குதல் நடத்தி இருந்த சம்பவம், உலக நாடுகள் அனைத்தையும் பேரதிர்ச்சிக்குள் ஆக்கி இருந்தது.
இந்த தாக்குதலுக்கு பிறகு, அமெரிக்க ராணுவப் படை, தாலிபான்களை ஒடுக்குவதற்காக ஆப்கானிஸ்தானில் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி இருந்தனர். பின்னர், தாலிபான்கள் ஆட்சி கலைக்கப்பட்டது.
அந்த சமயத்தில், அமெரிக்க படையிடம் இருந்து தப்பிப்பதற்காக தாலிபான் அமைப்பை நிறுவிய தலைவர் முல்லா உமர், தான் பயன்படுத்தி வந்த கார் ஒன்றை பயன்படுத்தி, அமெரிக்க ராணுவத்திடம் இருந்து தப்பித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
21 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட கார்
தொடர்ந்து, முல்லா உமர் பயன்படுத்திய காரும், ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் குழி தோண்டி புதைக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2013 ஆம் ஆண்டு, முல்லா உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. தாலிபான்கள் அமைப்பை நிறுவிய முல்லா உமர், பயன்படுத்தி பின்னர் குழி தோண்டி புதைக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது புதைக்கப்பட்ட காரை மீண்டும் தோண்டி வெளியே எடுத்துள்ளனர் தாலிபான்கள்.
விருப்பப்படும் தாலிபான்கள்
தற்போது, ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்கள் அமைப்பு அதிகாரத்திற்கு வந்துள்ள நிலையில், முல்லா உமரின் காரை வெளியே எடுக்க, அமைப்பின் தலைவர் முடிவு செய்துள்ளார். தற்போதும் இந்த கார் நல்ல நிலையில் உள்ளதாகவும், முன் பக்கம் மட்டும் சற்று சேதமடைந்து காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதே போல, ஆப்கானிஸ்தானின் தேசிய அருங்காட்சியகத்தில், முல்லா உமர் பயன்படுத்திய காரை தேசிய சின்னமாக வைக்க வேண்டும் என தாலிபான்கள் விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. குழிக்குள் புதைக்கப்பட்டிருந்த முல்லா உமரின் கார் எடுக்கப்படும் புகைப்படங்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.