நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு... 3000 லிட்டர் மதுபானத்தை சாக்கடையில் ஊற்றிய தாலிபான்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு... 3000 லிட்டர் மதுபானத்தை சாக்கடையில் ஊற்றிய தாலிபான்கள்..!
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த உடனேயே நாட்டில் மதுபானங்களை தடை செய்வதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அந்நாட்டின் உளவு அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது 3000 லிட்டர் மதுபானங்களை கண்டறிந்து அவற்றை கால்வாயில் கொட்டியிருக்கின்றனர்.
நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு
மதுபானங்களை தயாரித்தல் மற்றும் அவற்றை விற்பனை செய்தல் ஆகிய இரண்டுமே தண்டைக்குரிய குற்றம் என தாலிபான்கள் கருதுகின்றனர். முஜாகிதீன்களிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய போதே, மதுபானங்களை ஒழிக்க அப்போதைய தாலிபான் சுப்ரீம் கமாண்டர் முல்லா ஓமர் பல்வேறு நடவடிக்கையை எடுத்தார்.
விரைவில் பேரிடர் காலம் முடிவுக்கு வருகிறது.. ஒமைக்ரான் குறித்து விஞ்ஞானிகள் முழு விளக்கம்
கால்வாயில் கொட்டப்பட்ட மதுபானம்
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் உளவுத்துறை பொது இயக்குனரகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சமீபத்தில் தீவிர தேடுதல் வேட்டையை ஆரம்பித்தனர். இதில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 லிட்டர் மதுபானத்தை கண்டறிந்திருக்கின்றனர். இந்த தேடுதல் வேட்டை எப்போது நடைபெற்றது என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், கைப்பற்றப்பட்ட 3000 லிட்டர் மதுபானத்தையும் கால்வாயில் அதிகாரிகள் கொட்டிய வீடியோ தற்போது டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
இதுகுறித்துப் பேசிய உளவுத்துறை பொது இயக்குனராக அதிகாரி ஒருவர்,” மதுபான உற்பத்தி மற்றும் அதனை விற்பனை செய்வதில் இருந்து முஸ்லிம்கள் தீவிரமாக ஒதுங்கி இருக்க வேண்டும்,"எனத் தெரிவித்திருந்தார்.
கடந்த ஆகஸ்டு 15 ஆம் தேதி நாம் இங்கே சுதந்திரம் கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் ஆட்சியை மீண்டும் பிடித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆப்கானிஸ்தானின் அப்போதைய அதிபர் அஷ்ரப் கானி ஹெலிகாப்டர் மூலமாக ரகசியமாக தப்பித்துச் சென்றார்.
அதுதொடர்ந்து, ஆப்கானிஸ்தான் முழுவதும் மது உள்ளிட்ட போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் போதைப்பொருட்களை விற்பனை செய்யும் கும்பலை கைது செய்ய பல்வேறு முயற்சிகளை தலிபான் அரசு தீவிரத்துடன் முன்னேடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.
د ا.ا.ا د استخباراتو لوی ریاست ځانګړې عملیاتي قطعې د یو لړ مؤثقو کشفي معلومات پر اساس د کابل ښار کارته چهار سیمه کې درې تنه شراب پلورونکي له شاوخوا درې زره لېتره شرابو/الکولو سره یو ځای ونیول.
نیول شوي شراب له منځه یوړل شول او شراب پلورونکي عدلي او قضايي ارګانونو ته وسپارل شول. pic.twitter.com/qD7D5ZIsuL
— د استخباراتو لوی ریاست-GDI (@GDI1415) January 1, 2022