பஸ்ல ஒரு 'தாலிபான்' கையில 'துப்பாக்கி'யோடு ஏறுனாரு...! என் ஃப்ரண்ட் 'கைய' பிடிச்சிட்டு 'கண்ண' மூடினேன், அப்போ...' - 'கொடூர' சம்பவத்தை பகிர்ந்த மலாலா...
முகப்பு > செய்திகள் > உலகம்அமைதிக்கான நோபல் பரிசை பெற்றிருப்பவர் பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் செயற்பாட்டாளர் யூசுப்சாய் மலாலா. பெண் கல்விக்காக குரல் எழுப்பியதால், 15 வயதில் தாலிபான்கள் மலாலாவை பள்ளிப் பேருந்தில் நுழைந்து சுட்டனர். அந்த கொடூர நிகழ்வை நினைவுகூர்ந்து தனது சமூக வலைத்தளத்தில் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
தாலிபான் ஒருவர் பஸ்ஸில் ஏறி என் மீது துப்பாக்கியால் சுட்டார். அந்த தோட்டா எனது இடது கண்ணை உரசி சென்று, மண்டை ஓட்டையும், மூளையையும் துளைத்தது. தாடை உடைந்தது மட்டுமல்லாமல் நரம்புகள் பாதிக்கப்பட்டது.
சம்பவம் நடந்த அன்று பேருந்தில் தோழியுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார், அன்று அவருக்கு நடந்தது என்னவென்றே நினைவில் இல்லை என்று கூறிய மலாலா அன்றைக்கு உண்மையாகவே என்ன நடந்தது என என தோழியிடம் கேட்டுள்ளார்.
தோழி அப்போது என்ன நடந்தது என்பதை விளக்கியுள்ளார். அவர் கூறும்போது, 'அந்த தாலிபான் உன் பெயரை அழைத்தபோது நீ அமைதியாக அந்த தாலிபான் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாய். நீ என் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்ட வலி வெகுநாள் நீடித்தது. துப்பாக்கி குண்டு உன் மீது பாய்ந்த உடன் கையால் உன் முகத்தை மூடிக்கொண்டாய் பின் என் மடியில் மயங்கி விழுந்தாய்.' என்று தெரிவித்தார்.
இச்சம்பவத்துக்கு பின்பு அவருடைய இடது பக்க மண்டை ஓட்டை நீக்கியதால் மலாலா உயிர் பிழைத்தார். ஆனால் அவருடைய மற்ற உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்க தொடங்கியது. இதனையடுத்து லண்டனுக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
மலாலா கண்விழித்து பார்த்தபோது அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் ஆங்கிலத்தில் பேசியதை பார்த்து தான் எங்கு இருக்கிறோம் என்பதை தெரியாதவராக இருந்தார். அவருடைய பாதி முகம் செயலிழந்து காணப்படுவதை பார்த்தார். தன் கோர முகத்தை கண்ணாடியில் பார்த்தபோது, தலைமுடி பாதியாக மழிக்கப்பட்டிருப்பதை பார்த்து இதுவும் தாலிபான்கள் வேலையா என்று கேட்டுள்ளார்.
இதுகுறித்து மலாலா மேலும் கூறுகையில், 'ஒன்பது வருடங்களுக்கு பிறகு இப்போதும் அந்த குண்டு ஏற்படுத்திய பாதிப்பிற்காக சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறேன். இன்னும் முழுமையாக குணமடையவில்லை. ஆப்கானிஸ்தான் மக்கள் நாற்பது வருடங்களாக லட்சக்கணக்கான புல்லட்களை தாங்கிக் கொண்டிருக்கின்றனர்.' என்று தெரிவித்துள்ளார்.