உலக நாடுகளின் முகத்தில் கரியைப் பூசிய தாலிபான்கள் - அமெரிக்கா!.. ரகசியமாக நடந்த பேச்சுவார்த்தை!.. அடுத்த ஸ்கெட்ச் யாருக்கு?
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமையவிருக்கும் நிலையில், அமெரிக்காவின் உளவுத்துறை வட்டாரங்களில் இருந்து அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தாலிபான்களின் கொடுமையான சட்டங்களுக்கு அஞ்சி, அங்கிருக்கும் தங்கள் குடிமக்களை அழைத்து வர பல்வேறு நாடுகள் தொடர் நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன.
இதனால், தாலிபான்களுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அமெரிக்கா தனது படைகளைத் திரும்பப் பெற வேண்டும். இதனால் தற்போது இராணுவம் மூலம் மீட்புப் பணிகளை நடத்திவரும் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும், ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் மீட்புப் பணிகளை முடித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, ஆப்கான் விவகாரம் குறித்து பேசிய ஜோ பைடன், மீட்புப் பணிகளுக்கான கால அளவை நீட்டிக்க ஆலோசனை நடத்திவருவதாக தெரிவித்தார். இதன்பிறகு ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த தாலிபான்களின் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன், ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் மீட்புப் பணிகளை முடிக்காவிட்டால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் தான், அமெரிக்க உளவுத்துறையான சிஐஏவின் தலைவரும், தாலிபான்களின் இணை நிறுவனர் முல்லா அப்துல் கனி பரதரும் நேற்று ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும், இந்த பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும், மீட்புபணிகளுக்கான கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்து இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கலாம் என செய்திகள் கசிந்துள்ளன.
அமெரிக்காவின் CIAவுக்கும், தாலிபான் தலைவர் கனி பரதருக்கும் மிகப்பெரிய வரலாற்றுப் பிணைப்பு உள்ளது. சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு பரதர் சிஐஏ அமைப்பால் கைது செய்யப்பட்டு, எட்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பிறகு, கடந்த 2018ம் ஆண்டில் விடுதலையான அவர், தாலிபான் அமைப்பு சார்பாக முன்னின்று அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

மற்ற செய்திகள்
