உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் ஆப்கானியர்களுக்கு... பேரிடியாக வந்த செய்தி!.. நம்பிக்கை துரோகத்தால் நொறுங்கிப் போன மக்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்தாலிபான்களிடம் இருந்து தப்பிக்க துடித்திக் கொண்டிருக்கும் ஆப்கானிய மக்களுக்கு பேரிடியாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அங்கிருக்கும் குடிமக்களையும், தங்களுக்கு உதவிய ஆப்கானியர்களையும் நாட்டிற்கு அழைத்து வரும் பணியில் வெளிநாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே, ஆகஸ்ட் 31ம் தேதிக்கு பிறகு வெளிநாட்டு படைகள் நாட்டில் இருக்கக்கூடாது என தாலிபான்கள் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் ஸ்பெயினின் தூதரகங்களுக்கு சேவை செய்த அல்லது பணியாற்றிய அனைத்து ஆப்கானியர்களையும் நாட்டை விட்டு வெளியேற்ற முடியாது என்று ஸ்பெயின் எச்சரித்துள்ளது.
"நாங்கள் எங்களால் முடிந்தவரை பலரை வெளியேற்றுவோம். ஆனால், பலரை வெளியேற்ற முடியாமல் போகலாம்.
இதற்கு நாங்கள் காரணம் அல்ல, காபூலில் நிலவும் சூழ்நிலை தான்" என ஸ்பெயின் பாதுகாப்புத்துறை அமைச்சர் Margarita Robles கூறினார்.
முன்னதாக, தாலிபான்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆகஸ்ட் 31ம் தேதி காலக்கெடுவுக்கு முன் அனைவரும் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று இங்கிலாந்து பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் எச்சரித்ததைத் தொடர்ந்து, தற்போது ஸ்பெயினும் எச்சரிக்கை பல ஆப்கானியர்களை கலக்கமடையச் செய்துள்ளது.

மற்ற செய்திகள்
