தாலிபான் ஆட்சிக்கு வந்ததும் போட்ட 'முதல்' உத்தரவு!.. 'இவங்களா இப்படி'!?.. அதிர்ச்சியில் ஆப்கான்!.. 'அந்த' விஷயத்தில மட்டும் செம்ம ஸ்ட்ரிக்ட்!
முகப்பு > செய்திகள் > உலகம்தாலிபான்களின் ஆட்சி எப்படி இருக்கப் போகிறதோ என்ற அச்சத்தில் ஆப்கானியர்கள் இருக்கும் சூழலில், அவர்களின் முதல் உத்தரவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து, தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் சென்றதும், உலக நாடுகள் பல ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்யும் பணிகளைத் தொடங்கின.
அதேபோல், ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியிலும் ஒரு வித அசாதாரண சூழல் நிலவி வருகிறது. தாங்கள் அச்சத்துடனே இருப்பதாக ஆப்கானிஸ்தானியர்கள் பேட்டி அளிக்கும் காட்சிகளை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர். பொது மன்னிப்பு வழங்கப்படுவதால் அரசு ஊழியர்கள் முழு நம்பிக்கையுடன் பணிகளை தொடங்கலாம் எனவும் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். அரசு தொலைக்காட்சியில் பேசிய தாலிபான் அதிகாரி ஒருவர் இதை தெரிவித்துள்ளார்.
மேலும், ஆப்கானிஸ்தானில் பெண் ஊழியர்கள் மீது எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாது, அவர்கள் தாங்கள் வகித்த அரசுப்பணிகளுக்கு திரும்பவேண்டும் என்றும் அந்த அதிகாரி கேட்டுக்கொண்டார்.
அரசின் நிர்வாக கட்டமைப்பு ஏற்பாடுகள் இன்னும் தெளிவற்றதாக இருப்பதாக தெரிவித்த அந்த அதிகாரி, எனினும் ஆட்சி என்பது இஸ்லாமிய கருத்தியலை முன்னிறுத்தியே இருக்கும் என்றும் அவர் உறுதிபடுத்தினார்.