நாங்க 'அவர' மலை போல நம்பினோம்...! 'இப்படி கைய விரிச்சிட்டு போவாருன்னு நினைக்கல...' 'அசிங்கமா இருக்கு...' - ஆப்கான் பெண் அமைச்சர் வேதனை...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான் கைவசம் சென்றுள்ள நிலையில், அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சர் ரஹினா ஹமிதி பிபிசிக்கு பேட்டி அளித்துள்ளார்.
ஆஃப்கானிஸ்தானில் அரசுப்படைகள் மற்றும் தாலிபான்களுக்கிடையிலான மோதல் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இருபது ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பியோடினார், இதுகுறித்து விளக்கமும் அளித்துள்ளார், அதில், மக்கள் ரத்தம் சிந்துவதை விரும்பவில்லை என்று கூறிய அவர் தலிபான்கள் வென்று விட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆப்கான் கல்வித்துறை அமைச்சர் ரஹினா ஹமிதி பிபிசி தொலைக்காட்சிக்கு ஒரு நேர்காணல் அளித்துள்ளார். அதில், 'நானும், எங்கள் மக்களும் அதிர்ச்சியிலும் அவநம்பிக்கையிலும் இருக்கிறோம். இப்படி நடக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை.
எங்களுடைய அதிபர் அஷ்ரப் கனியை மலைப்போல் நம்பியிருந்தோம். இப்போது அதிபர் அஷ்ரப் ஆப்கானில் இருந்து வெளியேறியதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
அவர் நாட்டிலிருந்து வெளியேறவில்லை என நினைக்கிறேன். ஆனால் ஒருவேளை அவர் உண்மையில் ஆப்கானிலிருந்து வெளியேறி இருந்தால் இது மிகப் பெரிய அவமானம்' எனக் கூறியுள்ளார்.