உடனே கிளம்புங்க...! 'அடுத்தடுத்து திருப்பம்...' 'கூடுதல் படைகளை அனுப்ப ஜோ பைடன் உத்தரவு...' - என்ன நடக்கிறது...?
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தான் நாட்டில் மீண்டும் ராணுவ படைகளை அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் ஆப்கான் ராணுவத்திற்கும் தாலிபான் படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.
ஆப்கானில் இருந்து அமெரிக்க ராணுவப் படையினர் வெளியேறத் தொடங்கியதும் தாலிபான்கள் ஆப்கானை முழுமையாக கைப்பற்றுவதற்கான அடுத்தடுத்த திட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர்.
கடந்த சில தினங்களில், தாலிபான் படைகள் 34 மாகாணங்களில் 13 மாகாணங்களைக் கைப்பற்றி விட்டனர். இன்று (15-08-2021) தலைநகர் காபூலிலும் தாலிபான்கள் நுழைந்து விட்டனர். அதுவும் சரியாக அமெரிக்க தூதரகத்தின் மேலுள்ள ஹெலிபேடில் அவர்கள் தரையிறங்கி உள்ளதாக தகவல் வெளியானது. அதோடு மட்டுமல்லாமல் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி பதவி விலக உள்ளதாகவும் சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மீண்டும் அமெரிக்கா, ஆப்கனுக்கு கூடுதல் படைகளை அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன் 3,000 அமெரிக்க வீரர்கள் இருந்த நிலையில் தற்போது மேலும் 2,000 வீரர்களை அமெரிக்கா அனுப்பி உள்ளது.
இன்று தலைநகர் காபூல் நகருக்குள் தாலிபான்கள் நுழைந்து விட்டதால், மேலும் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.

மற்ற செய்திகள்
