நெருங்கியது CLIMAX!.. தலைநகர் காபூலுக்குள் தடாலடியாக நுழைந்த தாலிபான்கள்!.. உலகமே உற்றுநோக்கும் ஆப்கானிஸ்தானில் அடுத்தது என்ன?
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் ஆயுதங்களுடன் தாலிபான்கள் நுழைந்ததால் உலக நாடுகளிடையே உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கியதை அடுத்து, அந்நாட்டில் தாலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக, தாலிபான்கள் தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்தி உள்ளனர். இதனால், பல முக்கிய நகரங்களை தாலிபான்கள் அடுத்தடுத்து தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஜலலாபாத் நகரத்தையும் இன்று காலை தாலிபான்கள் கைப்பற்றினர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகருக்குள் தாலிபான்கள் நுழைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தாலிபான்கள் நுழைந்து இருப்பதாக காபூலில் வசிக்கும் மக்கள் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர். காபூல் நகருக்குள் தாலிபான்கள் ஊடுருவிட்டதால் விரைவில் ஒட்டுமொத்த ஆப்கன் நாடும் தாலிபான்கள் கட்டுக்குள் விரைவில் வரலாம் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியின் தலைமை அலுவலர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "யாரும் அச்சப்பட வேண்டும், காபூல் பாதுகாப்பாக உள்ளது" என பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
