'சர்வாதிகாரி!'..'சக்திவாய்ந்தவர்!'.. 'சாதுவானவர்!'.. வடகொரிய அதிபரைச் சுற்றியிருக்கும் 3 வலிமை மிக்க பெண்கள்!".. வைரல் ஆகும் பரபரப்பு தகவல்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | May 11, 2020 11:23 PM

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பற்றிய பல்வேறு தகவல்கள் மர்மமாகவும் ஆச்சரியமூட்டுவதாகவும் உலகிற்கு கிடைத்து வருகிறது. அண்மையில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவலை தென்கொரியா மறுத்ததோடு அவர் ஆரோக்கியத்துடன் துடிப்புடனும் இருக்கிறார் என்று கூறியது. அதன்படியே சில நாட்கள் பொதுவெளியில் தோன்றாத கிம், திடீரென 20 நாட்களுக்கு பிறகு வடகொரியாவின் தலைநகர் பியோயாங்கில் இருக்கும் தொழிற்சாலை விழாவில் கலந்து கொண்டார். இந்நிலையில் 38 வயதாகும் வடகொரிய தலைவரின் உள்வட்டத்தில் மூன்று வலிமையான மற்றும் அழகான பெண்கள் உள்ளதாக தற்போது செய்திகள் வலம் வருகின்றன.

meet the 3 powerful women around of north korea leader kim jong un

இந்த மூவரில் ஒருவர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங்(படத்தில் இடது பக்கம் உள்ளவர்). சமீபத்திய வாரங்களில் இவர்தான் வடகொரியாவின் சக்தி வாய்ந்த அமைப்பு மற்றும் வழிகாட்டல் துறை தலைவராகவும் ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறார். வடகொரியாவின் அடுத்த தலைவராக வருவதற்கான அதிகாரம்மிக்கவர் இவராகத்தான் இருக்க முடியும் என்றும் பரவலாகப் பேசப்பட்டது. நவீன புதிய ஆயுதங்கள் மீது மோகம் கொண்டவராக கூறப்படும் கிம் யோ அண்மைக்காலமாக தமது சகோதரருக்கு உதவியாக அரசு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். கம்ப்யூட்டர் அறிவியல் பட்டதாரியான இவர் 9 வயதிலிருந்தே சுவிட்சர்லாந்தில் கல்வி பயின்றதோடு, அதை முடித்த கையோடு வடகொரியாவுக்கு திரும்பிய பின்னர் பல்கலைக்கழக படிப்பை முடித்தார்.

இரண்டாவது இன்னொரு வலிமையான பெண்ணும் இதே வடகொரியாவில் இருக்கிறார்.  அவர்தான் ஹியோன் சாங்-வோல் (வயது 48, படத்தில் நடுவில் இருப்பவர்). ஆம், வடகொரியாவின் ஸ்பைஸ் கேர்ள்ஸ் என்றும் அழைக்கப்படும் பெண் மோரன்பாங் பேண்டின் முன்னணி பாடகராக ஒரு காலத்தில் விளங்கியவர் இவர்.  இவரும் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இறந்து விட்டதாக முதலில் வதந்திகள் பரவின. ஆனால் இவர்தான் இப்போது கிம்மின் மிக நெருங்கிய உதவியாளராக இருக்கிறார். இவர் மிகவும் சக்தி வாய்ந்த பெண் என்று இப்போது அமெரிக்காவில் வசிக்கும் வட கொரியாவில் பிறந்த ஜேசன் லீ என்பவர் தெரிவித்துள்ளார். அவர் நிச்சயமாக கிம்மின் மனைவியை விட சக்தி வாய்ந்தவர், ஆனால் கிம்மின் சகோதரியை போல் சக்தி வாய்ந்தவராக இருக்க முடியாது என்றும் ஜேசன் லீ  குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது வடகொரியாவின் மிக முக்கியமான பாப் நட்சத்திரமும், கிம்மின் மனைவியுமான ரி சோல் ஜூ(படத்தில் வலது பக்கம் இருப்பவர்). இதுவரை யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல் பெரும் செல்வாக்குடன் வளர்ந்து இவர் கிம்மை திருமணம் செய்துகொள்ளும் முன்பாக பாடகராக இருந்தவர்.  ஆனால் இவர் அரசியலுக்கு வருவாரா என்பது தொடக்கத்தில் சந்தேகமாக இருந்ததாகவும், மேல்தட்டு மக்களிடமிருந்து இவருக்கு கிடைத்த மரியாதை மற்றும் செல்வாக்கு பற்றியும் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் முன்னாள் உறுப்பினர் மற்றும் வடகொரிய ஆய்வாளர் புரூஸ் பெக்டோல் நியூயார்க் போஸ்ட்டிடம் தெரிவித்துள்ளார். கிம் ஜாங் உன்னிற்கு இருக்கும் ஆபத்துகள் பற்றி ரி சோல் ஜூ கூறுகையில், “கிம்மின் மாமா கொல்லப்பட்டதை, போல யாரும் கிம்மை கொல்ல மாட்டார்கள் ஆனால் அவரை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.