'ஒரு ஈ, காக்கா கூட வெளிய போக முடியாது...' '6 பேர் சேர்ந்து போட்ட மெகா பிளான்...' இது ஒண்ணும் 'ஒரே நாள்'ல நடந்திடல...' - அதுல 'ஒருத்தர்' சாதாரண ஆளே கிடையாது...!
முகப்பு > செய்திகள் > உலகம்இஸ்ரேலின் கில்போவா சிறைச்சாலையில் நடந்த சம்பவம் அந்நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலில் இருக்கும் அனைத்து சிறைச்சாலைகளுமே பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். இந்நிலையில், கில்போவா சிறையிலிருந்து பாலஸ்தினத்தை சேர்ந்த 6 சிறை கைதிகள் தப்பியோடியுள்ளனர். இதில் ஒருவர் முன்னாள் தீவிரவாதி எனக் கூறப்படுகிறது.
தப்பித்து சென்ற சிறை கைதிகள் "ஷாவ்ஷாங்க் ரீடெம்ப்ஷன்" என்ற புகழ்பெற்ற ஆங்கில திரைப்படத்தில் வருவதுபோல பல மாதங்களாக திட்டமிட்டு, சிறைக்குள்ளேயே கரண்டியை வைத்து சுரங்கம் தோண்டி தப்பித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து, இஸ்ரேல் ஊடகங்களில் இந்த சம்பவம் சென்ற திங்கட்கிழமை (06-09-2021) அதிகாலை நடந்ததாகவும், இதனை சிசிடிவி காட்சி மூலம் இஸ்ரேல் அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதோடு, காசா எல்லையில் இஸ்ரேல் ராணுவத்தின் ஆக்கிரமிப்புகளை எதிர்த்து பாலஸ்தீனர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் இதுபோன்ற சம்பவம் இஸ்ரேலில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.