‘1000 ஆண்டுகளாக உடையாமல் இருக்கும் கோழி முட்டை’!.. என்னங்க சொல்றீங்க..? மிரண்டுபோன ஆய்வாளர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆயிரம் ஆண்டுகளாக உடையாமல் இருந்த கோழி முட்டை கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் நாட்டின் யவ்னே (Yavne) நகரில் அகழாய்வு நடைபெற்றுள்ளது. அப்போது கழிவுநீர் தொட்டி ஒன்றை சுத்தம் செய்தபோது முட்டை ஒன்று கிடைத்துள்ளது. இதனை ஆய்வு செய்து பார்த்ததில், இது சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை என்பது தெரியவந்துள்ளது.
இத்தனை ஆண்டுகளாக கெட்டுப் போகாமலும், சேதம் அடையாமல் இருப்பதைக் கண்டு ஆய்வாளர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முட்டையின் ஓட்டை வைத்து அதன் பழமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும், முட்டையின் அடிப்பகுதியில் லேசாக விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கழிவுநீர் தொட்டியில் கோழி முட்டையுடன் சில பழங்கால மனித வடிவ பொம்மைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆய்வாளர்கள் தீவிர ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். 1000 ஆண்டு பழமையான கோழி முட்டை, மனித வடிவ பொம்மைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் இஸ்ரேல் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.