'எங்களை ஜெயிக்க வைத்தது தடுப்பூசி தான்'... 'இனிமேல் மாஸ்க் போட வேண்டாம்'... கெத்தா அறிவித்த நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்இதுவரை 70% க்கும் மேற்பட்ட மக்களுக்கு கரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக வரும் ஞாயிறுமுதல் திறந்தவெளியில் மக்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசியைத் தீவிரப்படுத்தியதன் காரணமாக இஸ்ரேலில் பிப்ரவரி மாதத்திலிருந்தே கொரோனா தொற்று குறைந்துள்ளது.
கடந்த சில வாரங்களாக இஸ்ரேலில் 300-க்கும் குறைவானவர்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த நாட்டில் இதுவரை 70% க்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இஸ்ரேல் சுகாதாரத் துறை அமைச்சர் யுலி எடெல்ஸ்டீன் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா வைரசிலிருந்து நம்மைப் பாதுகாக்க முகக்கவசங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
இந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் பொது இடங்களில் இனி முகக்கவசம் தேவையில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் மூடிய அரங்கில் நடைபெறும் நிகழ்வுகளில் மக்கள் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். வரும் ஞாயிறு முதல் இஸ்ரேலில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசங்கள் அணிந்து கொள்ளத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஒட்டுமொத்த மக்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்துவதை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
