'என்ன புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்...' ஏன் போடணும்...? 'அதுக்கு அவர் சொன்ன பதில் தான் அல்டிமேட்...' - மனுஷன் வீட்ல என்ன பாடு பட்டாரோ...!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தில் ஒருவர், தான் வாழும் இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என கூறி, சிறையில் அமைதியாக வாழ விரும்புவதாக காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்

இங்கிலாந்தின் பர்கஸ் ஹில்ஸ் என்னுமிடத்தில் வசிக்கும் நபர் ஒருவர், எந்த ஒரு குற்றமும் செய்யாமல், தன்னை சிறையில் அடைக்குமாறு பர்கஸ் ஹில்ஸ் காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பர்கஸ் ஹில்ஸ் காவல்நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் டேரன் டைலர் கூறுகையில், 'ஒரு நபர் நேற்று பிற்பகல் எங்களிடம் வந்து சரணடைந்தார். அவர் இதுவரை வாழ்ந்த மக்களுடன் இருப்பது பிடிக்காமல், சிறையில் அமைதியாக இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்' எனப் பதிவிட்டுள்ளார்.
ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருந்து எரிச்சலாகி விட்டதாகவும், எஞ்சிய காலத்தை அமைதியாக கழிக்க விரும்புவதால், சிறையில் அடைக்குமாறு கூறி, காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். தற்போது தான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை விட சிறை வாழ்க்கை மேலானது எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
