'தடுப்பூசியின் பின்னணி'...'ஓரினசேர்கைக்கும் தடுப்பூசிக்கும் என்ன தொடர்பு'?... பரபரப்பை ஏற்படுத்திய பிரபலம்!
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த ஆண்டு உலகளவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் என்னும் கொடிய தொற்று ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் மக்களுக்கு செலுத்தவும் ஆரம்பித்துள்ளனர். சில நாடுகளில் தடுப்பூசி செலுத்தப்பட்ட நபர்களுக்கு பக்க விளைவுகள் ஆகியவை ஏற்பட்டு வந்த வண்ணம் உள்ளன. இதனால் தடுப்பூசி குறித்து பல்வேறு கேள்விகளும் முன் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த யூத மதகுரு டேனியல் அசோர் என்பவர் கொரோனா தடுப்பூசி குறித்து வினோதமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். ஆன்லைன் வழியாக நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய மதகுரு, 'கொரோனா தொற்றிற்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி என்பது இலுமினாட்டி, ஃப்ரீ மேசன்ஸ் மற்றும் பில் கேட்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்ட உலகளாவிய தீங்கிழைக்கும் அரசாங்கத்தின் முயற்சி ஆகும்' என தெரிவித்துள்ளார்.
'தடுப்பூசிகள் என்பது ஒரு மூலக்கூறில் இருந்து உருவாக்கப்படுகிறது. அப்படி உருவாக்கப்படும் தடுப்பூசி ஒருவரது உடலில் எதிர் போக்குகளை உருவாக்கும் என்பதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது' என்றும் குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசிக்கும் ஓரினசேர்கைக்கும் தொடர்பு இருப்பதாக மதகுரு தெரிவித்துள்ள கருத்து உண்மையல்ல என்று தகவல் தெரிவிக்கின்றது. மூலக்கூறு மூலம் தயாரிக்கப்படும் தடுப்பூசி, உடலில் நோய் எதிர்ப்பை உருவாக்கும். மேலும் இது பாலுணர்வை பாதிக்காது என்பது தான் உண்மை.
உலகளவில் பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், இஸ்ரேலை சேர்ந்த மதகுரு தெரிவித்துள்ள கருத்து பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.

மற்ற செய்திகள்
