மறுபடியும் 'அங்க' சண்டை தொடங்கிடுச்சு...! இந்த தடவ 'பலூன்களை' வச்சு வித்தியாசமான தாக்குதல்...! - பதற்றமான சூழலில் 'இரு' நாடுகள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. காஸா நகரில் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், கட்டடங்கள் சேதம் அடைந்தன.
ஏற்கனவே காஸா நகர் மீது இஸ்ரேல் கடந்த மாதம் கடும் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்தனர், கட்டிடங்கள் தரைமட்டமாகின. உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக போர் நிறுத்தம் செய்யப்பட்டது. தற்போது மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. ஒருங்கிணைந்த ஜெருசலேமின் அனைத்து பகுதிகளும் தங்களுக்கே சொந்தம் என இஸ்ரேல் தெரிவித்து வரும் நிலையில், கிழக்கு ஜெருசலேமை பாலஸ்தீனம் சொந்தம் கொண்டாடி வருகிறது.
இருநாடுகளுக்கும் இடையே கடந்த மாதம் ஏற்பட்ட மோதலில், 260 பாலஸ்தீனியர்களும், இஸ்ரேலை சேர்ந்த 13 பேரும் கொல்லப்பட்டனர்.
பின்னர் உலக நாடுகளின் தலையீட்டில் போர் நிறுத்தம் செய்யப்பட்டது, பாலஸ்தீனத்தில் இருந்து தெற்கு இஸ்ரேலுக்கு சிலர் நெருப்பு பலூன்களை அனுப்பியதால், 20க்கும் மேற்பட்ட இடங்களில் தீ பற்றி எரிந்தது.
இதற்கு பதிலடியாக, காஸா நகரில், ஹமாஸ் அமைப்பினரின் இருப்பிடத்தை நோக்கி, இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து சேதம் அடைந்தன. இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் ஏற்பட்டுள்ளதால், பதற்றமான சூழல் நிலவுகிறது.